இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

படம்
விஜயை கண்மூடித் தனமாக காதலால் விஜயின் அரசியல் வருகையை கொண்டாடும் பெண்களுக்குத்தான் இந்தப்பதிவு! 'விஜய் விவாகரத்தில் கள்ளத்தொடர்பு ஒன்றும் பிரச்சனை இல்லை' என நியாயப்படுத்தும் பெண்களுக்கு ஒரு கேள்வி: இதேபோல் உங்கள் கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டால் அதையும் 'நிதர்சனம்' என ஏற்றுக்கொள்வீர்களா? 'என் கணவனை விட விஜயைத்தான் எனக்குப் பிடிக்கும்' எனப் பகிரங்கமாகப் பேட்டி கொடுக்கும் அளவிற்கு, ஒரு நடிகர் மீதான ஈர்ப்பு இளம் பெண்களைப் பித்தாக மாற்றியுள்ளது.  'அவரைப் போன்ற ஒரு ஆண் கணவராக வர வேண்டும்' என அவர்கள் மனதார விரும்புவதே, அவர் தன் மனைவிக்குச் செய்யும் துரோகத்தைக் கூடக் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தத் தூண்டுகிறது.  திருமணம் ஆகாதவர்களுக்கு: கள்ளத்தொடர்பு வைத்திருக்கப் போகும் ஒருவரே உங்களுக்குக் கணவராக வர மனதார வாழ்த்துக்கள்! முக்கியக் குறிப்பு: இதே கேள்வியை நான் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதத்திலோ அல்லது விஜய்யின் ஆண் ரசிகர்களிடமோ கேட்கப்போவதில்லை, ஏனெனில் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், விஜய்யைப் போன்ற ...

கடந்த 5 ஆண்டுகளில் ஸ்டாலின் தந்த விடியல்கள்...

கடந்த 5 ஆண்டுகளில் ஸ்டாலின் தந்த விடியல்கள்... 1. வேங்கைவயல் சம்பவம்   2. ஆம்ஸ்ட்ராங் படுகொலை   3. ‘ஓசி பஸ்’ என்று விமர்சித்த பொன்முடி   4. நீட் தேர்வு ரத்து என கூறி ஏமாற்றியது   5. கல்வி கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது   6. விவசாய கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது   7. பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு   8. விசிகவினரே கட்சி கொடி ஏற்ற முடியாத நிலை   9. திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் விற்பனை   10. மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வு   11. அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன்   12. கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணம்   13. காவிரியில் மேகதாது அணை கட்டும் காங்கிரஸ்   14. அம்மா உணவகம் மூடப்படுகிறது   15. சென்னை வெள்ளம் – 4000 கோடி பேக்கேஜ்   16. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒழுகும் வெல்லம் ஊழல்   17. அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி   18. மாற்றுத்திறனாளி உலகக் கோப்பை வென்றதாக ஏமாறிய உளவுத்துறை   19...

பொதுவாக காங்கிரஸ் வெல்வது நாட்டிற்கொன்றும் அவ்வளவு நல்ல செய்தியெல்லாம் இல்லை!

படம்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் யார் கை ஓங்கினாலும், அது அப்படியே MP தேர்தலிலும் எதிரொலிக்கும் எனச் சொல்லிவிட முடியாதென்பதே நம் கருத்து. ஆனால் indicator ஆக எடுத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான்.  ராஜஸ்தான் பொதுவா பிஜேபி காங்கிரஸ் மாறி மாறித்தான் வருகிறது கடந்த 20-25 வருடங்களாகவே. தற்போதைய காங்கிரஸின் அஷோக் கெலாட் ஆட்சி, மீண்டும் காங்கிரஸே என்கிற நிலைக்குக் கொண்டு செல்வாரா எனத் தெரியவில்லை.  ஆனால் நிறைய நல்ல விசயங்களை செய்திருப்பதுவும், சச்சின் பைலட்டை ராகுல் smooth ஆக handle செய்த விதமெல்லாம் காங்கிரஸுக்கு நல்ல பலம். பிஜேபியும் நல்ல பலத்துடன் சரிக்கு சரியாக மோதியிருக்கிறது. மீண்டும் காங்.ஜெயிக்குமென்றே தோன்றுகிறது. பார்ப்போம்.  மத்தியபிரதேஷம் போனமுறை காங்கிரசே அதிக எண்ணிக்கையில் ஜெயித்தது. சிந்தியாவைத் தூக்கி ஆட்சியைக் கவிழ்த்து அதற்கப்பறம் தேர்தல் என ஜனநாயகப் படுகொலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்த்தியது பிஜேபி. இந்த முறையும் கூட கடும் போட்டியே நிலவுகிறது. பிஜேபி ஜெயிக்குமென்றே நானினைக்கிறேன்.  சட்டீஸ்கர் கிட்ட கிட்ட வந்தாலும் காங்கிரஸ் வெல்லும்.  தெலுங...

அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍

படம்
அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍 ரத்தத்தின் ரத்தங்களே, உங்கள் Booth-ல் 51% ஓட்டை வாங்கிக் காட்டுங்கள். அவ்ளோ தான் இலக்கு. எளிதான மற்றும் வலிமையான இலக்கு. ஒன்றியம் ஒத்துழைக்கல, மாவட்டம் அதப் பண்ணல இதப் பண்ணல ங்கிற பல்லவி எல்லாம் வேணாம்.  உங்க பூத் voter listல, நம்ம கட்சிகாரங்க எத்தனை பேரு, திமுக காரன் எத்தனை பேரு, மற்றக் கட்சியில் இருப்பவன் யார் யார் என லிஸ்ட் எடுங்க.  மீதி எவ்ளோ பேர் எந்தக் கட்சியிலும் இல்லை என்பதையும், அவர்களிடம் நம் கட்சி மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் என்னென்ன செய்ய முடியுமெனப் பார்த்து யோசித்து அதைச் செய்யுங்கள்.  வெளியூர் ல இருக்கிற, நம்மக் கட்சி காரன் ஓட்டுப் போட வந்துருவானா அல்லது எதும் உதவி தேவைப்படுதான்னுப் பாருங்க. அதை சரி பண்ணுங்க. 18-30 வயசு தம்பி தங்கைகளிடம் மென்மையாக விவாதம் செய்யுங்கள். இதுவரை அதிமுக என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதையும், அடிப்படைக் கொள்கைகளையும், அண்ணாதிமுகவிற்கு அவர்கள் ஏன் வாகளிக்க வேண்டுமென்பதையும் பொறுமையாக எடுத்துரையுங்கள்.  எடப்பாடியார் எதிர்கொண்ட சவால்களையும், அவர் செய்த மக்கள...

யார் காலில் தான் கருணாநிதி விழவில்லை..?

படம்
சசிகலாவின் காலைப்பிடித்து ஆட்சிக்கு வந்த பழனிசாமி இப்போது மோடி, அமித்ஷாவின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் பாதம் தாங்கி பழனிசாமி - பால்டாயில் உதயநிதி எவர் காலைப்பிடித்தும் அவர் இந்நிலைக்கு வரவில்லை.  ஆனால், அவர் காலை, ஆறடி நிலத்துக்குப் பிடித்தது யார், கண்ணீர்ப் பெருக்கெடுத்து அவரின் கையைப் பிடித்து கதறினேன் என கதறியது யாரென் ஊர் உலகத்திற்கு நன்றாகவேத் தெரியும்.  அதுசரி பால்டாயில் உதயநிதி,  1969 அண்ணா மறைந்தவுடன் புரட்சித்தலைவரின் காலைப் பிடித்து முதல்வரான ஒரு கயவனின் கதை தெரியுமா உங்களுக்கு..?  எங்கள் தங்கம் படம் நடித்துத் தாருங்கள் கலைச்செல்வி எனப் புரட்சித்தலைவியின் காலைப் பிடித்த ஒரு பித்தலாட்டப் பேர்வழியின் வரலாறு தெரியுமா உங்களுக்கு..?  சர்க்காரிய அறிக்கையின் படி நடவடிக்கை எடுத்துவிடாதீரென, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என சாஸ்ட்டாங்கமாய் விழுந்து, இந்திராகாந்தியின் காலைப் பிடித்த, இந்தியாவின் மோசமான ஒரு தீயசக்தியின் திடுக்கிடும் அரசியல் பயணங்கள் குறித்தெதாவுது உங்களுக்குத் தெரியுமா..?  2ஜி வழக்...

தமிழ்நாட்டில் யார் யார் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்துள்ளனர்

படம்
கருணாநிதி 6863 ஜெயலலிதா 5234 எம்.ஜி.ஆர் 3715 காமராஜர் 3457 எடப்பாடி கே பழனிச்சாமி 1539 பக்தவத்சலம் 1249 முக ஸ்டாலின் 889+ PS குமார சாமி ராஜா 804 ராஜாஜி 733 அண்ணா 698 O பன்னீர்செல்வம் 471 VN ஜானகி 23 VR நெடுஞ்செழியன் 21

அதிமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய சாதனைகள்..!

படம்
சொல்லில் மட்டுமல்லாமல் செயல்களிலும் அத்தியாயம் படைப்பது அதிமுக🌱 அதிமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய சாதனைகள்; 1.தொட்டில் குழந்தை திட்டம் தந்து மகளிர் குலம் காத்தது அம்மாவின் அரசு! 2.மகளிருக்கு 69% இடஒதுக்கீட்டிற்கு முதன்முறையாக குரல்கொடுத்த கட்சி! 3.உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது 4.பட்டம் அல்லது பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ₹50,000 நிதியுதவி 5. திருமண நிதியுதவியாக ₹50,000 நிதியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை தொகுப்பு வழங்கியது.! 6.கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் தரமான மருத்துவ வசதிகளை வழங்கியதுடன் சமுதாய வளைக்காப்பு விழா நடத்தி நிதியுதவியும் வழங்கியது.! 7.மகப்பேறு காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம் மற்றும் இணைஊட்டச்சத்து சத்துணவு மாவு வழங்கியது.  8.பெண்களின் பாதுக்காப்பினை உறுதிப்படுத்தும் வகையில் "அம்மா பட்ரோல் திட்டம்" செயல்படுத்தப்பட்டது.! 9.மகளிர் மேலும் உயர்ந்திட "அனைத்து மகளிர் காவல்நிலையம்" உருவாக்கியது.! 10.மகளிர் த...

நீட் தேர்வும் உண்மையும் பொய்யும் : நடுநிலையாளர்

படம்
நீட் தேர்வும், உண்மையும், பொய்யும்., 👇 யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து கொள்ளுங்கள்., அது உங்கள் உரிமை., ஆனால் பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்காதீர்கள்., நீட் தேர்வை, நீக்கவே முடியாதா என்றால் நிச்சயம் முடியும் தான், மக்களவை & மாநிலங்களவையில் நீட் ரத்து செய்வதற்கான சட்ட வரைவு கொண்டுவந்து அதை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி, அதை உச்ச நீதிமன்றம் & குடியரசு தலைவரின் சம்மதத்தோடு நீக்குவதற்க்கானதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி., தற்போது உள்ள சூழ்நிலையில் இதை செய்ய மத்திய ஆளும் கட்சியான பிஜேபியால் மட்டுமே முடியும்., நீட் வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பிஜேபி இதை செய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே., மாநில கட்சியான திமுகவால் இது சாத்தியமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்., ரெண்டாவது.,  நாளை , ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி நீட்டை ரத்து செய்துவிடுமா என்றாலும் 100 க்கு 99 சதவிகிதம் வாய்ப்பு கம்மிதான், ஏனென்றால் இந்தியாவில் நீட் தேர்வு அவசியம் என சொல்லி அதை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அதை சட்டமாக்கியத...

நேற்றைய ஓ பன்னீர்செல்வம் என்னும் சுயநலவாதியின் பேட்டி எதை உணர்த்துகிறது?

படம்
நேற்றைய ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பேட்டி: 1. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர் என்பதை நிரூபித்து இருக்கிறது, 2. திமுக என்னும் தீயசக்தியை, பாஜக என்னும் மதவாதசக்தியை எதிர்க்க கூடிய தலைவர் தமிழ்நாட்டில் அது எடப்பாடியார் மட்டுமே என்பதை தெளிவுபடுத்தியது. 3. திரு. O பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருக்கும் கூஜாக்களை ஏன் அதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சந்தேகம் இருந்தவர்களுக்கு விடையாக அவர் திருவாயிலேயே உதிர்ந்து இருக்கிறது, 4. அண்ணா, அம்மா இவர்களின் புகழை கடத்தி செல்ல தகுதியான தலைமையை இயற்கை நமக்கு கொடுத்து இருக்கிறது.

என்ன நடந்தது 25 செப்டம்பர் 2023 அன்று அதிமுக தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகையில்...

படம்
தமிழ்நாட்டில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து எடப்பாடி தெளிவுப்படுத்திய நிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோரை செப். 23-ம் தேதி டெல்லிக்கு அனுப்பிவைத்தார் எடப்பாடி. அவர்களும் அண்ணாமலை குறித்து கருத்தை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தெளிவுப்படுத்தினார்கள். ஆனால், ஜே.பி.நட்டா அதை காதிலேயே வாங்கிகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் செப்.25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று 24-ம் தேதி காலை அறிவிப்பு வெளியானபோதே, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை' என்பதை எடப்பாடி அறிவிக்கப்போகிறாரென்று தகவல் பரவியது. அதன்படி, செப்.25-ம் மதியமே அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூடத்தொடங்கினர். வழக்கத்துக்கு மாறாக கூட்டமும் அலைமோதியது. ஆங்காங்கே அண்ணாமலைக்கு எதிராகவும், பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷங்களை கேட்ட முடிந்தது. கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளின் செல்போன்கள் மு...

திமுகவின் மூலதனமே பொய் தான், பொய் மட்டும் தான்!!!

படம்
திமுக சார்பில் தொலைகாட்சி விவாதங்களில் பேசும் வக்கீல் சரவணன் அண்ணாதுரை என்பவர் போகிற போக்கில், தமிழ்நாட்டில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது கருணாநிதி தான் என்று பதிவிட்டிருக்கிறார். அண்ணாதிமுகவின் அடிமட்ட தொண்டனான நான், இதை பார்த்ததும் அதிர்ச்சியடையவில்லை.  பித்தலாட்டம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்த, பித்தலாட்டத்தின் பிதாமகன், திரு கருணாநிதி அவர்களின் வழியில் வந்தவர்கள், பித்தலாட்டம் செய்யாமலிருந்தால் தான், அதிர்ச்சியடைய வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை அறிந்தவன் நான். சரி, விஷயத்திற்கு வருவோம்.  69% இட ஒதுக்கீடு கொண்டுவந்தது யார்..? அதன் வரலாறு தான் என்ன..? தரவுகளை நான் தருகிறேன். பிறகு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். 1950 அரசியலமைப்புச் சட்டம் 41% இட ஒதுக்கீட்டைத் தந்தது.  பிற்படுத்தப்பட்டோருக்கு OBC - 25% பட்டியல் இனத்தவருக்கு SC - 16% புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு உருவான அன்றைய திமுக அரசால், 1971-76 திமுக ஆட்சிக் காலத்தில் 8% உயர்த்தப்பட்டு, 41% என்பது 49% ஆக மாறுகிறது இட ஒதுக்கீடு.  அதாவுது,  OBC -...

உண்மையான சனாதான தர்மத்தின் இடைசொருகளை ஆக்கப்பூர்வமாக எதிர்க்கும் கட்சி அதிமுக மட்டுமே!!!!

படம்
🌟 சமூகநீதி / இடஒதுக்கீடு 1) 50% இடஒதுக்கீட்டை தந்தது அதிமுக...! 2) 69% இடஒதுக்கீட்டோடு சட்டப்பாதுகாப்பும் தந்தது அதிமுக..! 3) மணியக்காரர் முறை ஒழிக்கப்பட்டு,VAO பதவி உருவாக்கம்... 4) உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு... 5) தெருக்களில் இருந்த சாதி பெயர் நீக்க நடவடிக்கை... 6) அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு...  🌟 மகளிர் நல மேம்பாடு 1) குழந்தைகளுக்கு தாயின் முதலெழுத்தையே Initial ஆக போட உரிமை வழங்கியது. 2).மகளிர் காவல் நிலையத்தை அமைத்து கொடுத்தது. 3) பெண்கள் சுயதொழில் தொடங்க வழிவகை செய்தது. 4) மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அதிகரித்தது. 5) பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கியது... 6) பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தது...! 7) தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை ஏற்படுத்திக் கொடுத்தது... 8) ஆசியாவிலேயே முதல் பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்தியது...! 9) +2 படித்திருந்தால் பெண்களுக்கு 25,000 ரூ...உயர்கல்வி படித்தால் பெண்களுக்கு 50,000 ரூ என்று திருமண உதவித்தொகை வழங்கியது அதிமுக அரசு...! 10) பெண் சிசுக்களை காக்க த...

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு

படம்
எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்து இருக்கும் என்ற போதிலும் கூட,  அவரது அரசியல் பிரவேஷம் எப்போது?  சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்?  என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.  ஆனால் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் ...

தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யும் அதிமுகவின் லிங்க்

படம்
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் அதிமுக விதிகளின் செய்யும் மாற்றம் அதிமுக பொதுக் குழு தீர்மானம் இடம்பெறும். https://eci.gov.in/files/file/4934-all-india-anna-dravida-munnetra-kazhagam-constitution/ List of AIADMK office bearers uploaded in ECI website link below: https://eci.gov.in/files/file/15120-all-india-anna-dravida-munetra-khazagham/

இடைத்தேர்தல் தோல்வியின் போது கருணாநிதி எழுதிய கடிதம் ஒரு நினைவூட்டல்

படம்
கருணாநிதி எழுதிய கடிதம்: அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும், அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட வைத்தார்கள். ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரசின் இலவச உதவிப் பொருள்களான மிக்ஸிகள், கிரைண்டர்கள், மின் விசிறிகள் போன்றவை அந்தத் தொகுதிக்குள் கொண்டு சென்றதை 11/11/2013 தேதிய "தினமலர்" நாளேடே வெளியிட்டிருந்தது. ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்க ளின் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடவே இல்லை. தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக கொடி கட்டிய காரில் வந்தபோது, அமைச்சருக்குப் பாதுகாப்பாக காவல் துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு அரசு ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தினர். அதிமுக வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, நாற்பதுக்கும் மேற்பட்ட அதிமுக கொடி கட்டிய கார்கள் தேர்தல் விதி முறைகளை மீறி வந்தன. 13/11/2013 அன்று பகல் 12 மணியளவில் அனைத்து அமைச்ச...

ஆதரவு கொடுத்தும் கேட்கத்தான் யாருமில்லை!!!

படம்
ஈரோடு இடைத்தேர்தலும், அரசியல் தற்குறி அண்ணாமலை expose ஆனவிதமும் - ஒரு பார்வை  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை, தானே அங்கு போட்டியிட விரும்பினார்.  அதிமுக திமுகவுக்கு இணையாக பிஜேபி வளர்ந்துவிட்டது என கூசாமல் கொக்கரித்த அண்ணாமலை, 5% ஓட்டைக் கூட அங்கு வாங்கிக் காண்பிக்க முடியாது என்ற கள 'உண்மை' தெரிந்துவிட்டதால் பின்வாங்கினார் சரி அடுத்து, அதிமுகவை ஆட்டங்கட்ட அண்ணாமலை செய்த பகீரதபிரயத்தனங்கள் பல. அவற்றுள் சில... ஓடிச்சென்று வாசன் அவர்களை கிட்டதட்ட மிரட்டி, தாமரை சின்னத்தில் யுவராஜை நிறுத்துங்கள் என்றார். முடியவில்லை. பிப் 1 பிஜேபியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார். நிறைய பிஜேபியினர் இடைத்தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர் என்றார்.  நாராயணன் திருப்பதியை விட்டு, நாங்கள் போட்டியிடக் கூட வாய்ப்பிருக்கிறது, அதிமுக காத்திருந்தால் காத்திருக்கட்டும் என்று திமிராக வேண்டுமென்றே பேச வைத்தார்.  தொகுதிக்கு 100 ஓட்டு கூட இல்லாத  இந்த ஏசி சண்முகம், பச்சமுத்து மற்றும்   ஜான்பாண்டியனை வைத்து, அதிமுகவை லாம் நாங்க மதிக்கல, பிஜேபி சொன்னா நாங்க ஒ...

தலைவன் எடப்பாடியார் நடப்பதே தடமாகும்

படம்
திரு. EPS அவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கும், சசி தினா ஓபி மற்றும் பிஜேபி ஆதரவாளர்களைப் பாருங்கள், ▪டெல்லிகிட்ட சொல்லி இரட்டை இலையை முடக்கிடுவோம், அப்பறம் எப்படி உங்க எடப்பாடி செயிப்பாருன்னு நாங்களும் பார்க்கிறோம் ▪திமுக கூட சேர்ந்து, கொடநாடு கொலைக்கேசுல உள்ள உள்ள தள்றோமா இல்லியான்னு பாரு ▪CBI ED ய வச்சி ஊழல் வழக்குல உள்ள தள்ளிடுவோம் ஜாக்கிரதை ▪தேர்தல் ஆணையத்துகிட்ட ஒரு வார்த்தை பேசினா போதும், உங்க எடப்பாடி ஆட்டம் க்ளோஸ் ▪சுப்ரீம் கோர்ட்ல தான் இன்னும் கேஸூ இருக்கு தெரியும் ல? தீர்ப்ப மாத்தி எழுதச் சொன்னா எடப்பாடியோட சோலி முடிஞ் தம்பி  நிற்க மேற்சொன்ன கும்பல், மேற்சொன்ன காரணிகளை வைத்து எடப்பாடியாரை கார்னர் செய்துவிடுவோம் என்று மிரட்டிப் பார்க்கிறார்களே தவிர, ஒருவர் கூட, ஒரே ஒருத்தர் கூட, ▪எடப்பாடியார்கிட்ட இருக்கிற தொண்டர்களை இழுத்து, எடப்பாடியாரைத் தோற்கடித்து விடுவோம் ▪எடப்பாடியார்கிட்ட இருக்கிற நிர்வாகிகளை எங்கள் பக்கம் மாற்றி, எடப்பாடியாரைத் தோற்கடிப்போம் ▪எடப்பாடியாரை விட அதிகமாக உழைத்து வியூகமமைத்து அவரை வென்று காட்டுவோம் ▪எடப்பாடியார் க்கு இருக்கும் செல்வாக்கைக்...

ரவீந்திரன் துரைசாமி : இதனால் தான் இப்படி குதிக்கிறான்

படம்
ரவீந்திரன் துரைசாமி, ஜெயலலிதா அம்மாவிடம் ராஜ்ய சபா எம்பி சீட் கேட்டான். அதெல்லாம் குடுக்க முடியாது என்று அனுப்பிவிட்டார்கள். சசிகலா சிபாரிசு செய்தும் கிடைக்காமல் போனது. அதை கிடைக்க விடாமல் செய்ததில் 5 வர் அணிக்கு முக்கிய பங்குள்ளது. அந்த ஐவர் அணியில் முக்கியமாக எடப்பாடி கே பழனிச்சாமி (சசிகலா ஆதரவாளராக அறியப்பட்டு தற்போது எதிராக உறுதியாக இருப்பவர்), நத்தம் விஸ்வநாதன் (சசிகலா எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருப்பவர், யார் சசிகலாவை எதிர்த்தாலும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்), கேட்பார் பேச்சை கேட்கும் பன்னீர் (சசிகலா அடிமையாக இருந்து, சசிகலாவி்டம் பேரம் பேசியது வரை உயர்ந்து, பதவி போனவுடன் சசிகலாவை எதிர்த்து, பதவி தன்னை விட்டு மீண்டும் போனவுடன் திருப்பவும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து, தற்போது நடுரோட்டில் இருப்பவர்), பழனியப்பன் (அமமுக சென்று, தற்போது திமுகவில் இருக்கிறார்), வைத்தியலிங்கம் (சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர், மூளை கோளாறு ஏற்பட்டு தற்போது பன்னீரோடு சேர்ந்து சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு பன்னீரோடு துணையாக நடு ரோட்டில் நிற்பவர்) ஆகியோர் இருந்த...

23 ஜூன் அன்றே பொதுச் செயலாளர் ஆகியிருப்பார் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி!!!!

படம்
பொதுக்குழுவில் 23 தீர்மானம் தான் நிறைவேற்ற வேண்டும் என்று வரம்புமீரிய ( உச்சநீதிமன்றம் சொன்ன வார்த்தை இது) தீர்ப்பால் அதுவும் இரவு முழுவதும் விசாரித்து பகல் 4:30 மணிக்கு வழங்கிய (சாமானியன் தவறே செய்யாதவன் நிரபராதி என தீர்ப்பு வழங்கவே 10 நாள் வரை எடுத்துக் கொள்ளும் நீதிமன்றம் என்பதையும் நினைவில் கொண்டு) தீர்ப்பால் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஆகியிருக்க வேண்டியர் மீண்டும் நீதிமன்ற தீர்புக்கு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நீதிமான்கள் கடவுளுக்கு சமம் என்பது தனிமனிதனின் ஆசைக்கு, அரசியல் அழுத்தங்களுக்கு, அதிகாரவர்கங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கவேண்டும் என்பதற்கு தானே தவிர அவர்களின் இத்தகைய வரம்புமீரிய தீர்புகளுக்கு இல்லை. ஒரு வேளை ஜூன் மாதம் 23 ஆம் தேதி அதிகாலையில் இந்த தீர்ப்பு உச்சநீதின்றத்தில் கூறிய போல வரம்புமீரிய தீர்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கடந்த பொதுக்குழுவிலேயே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார். தற்போது வரை எவ்வளவு அரசியல் அழுத்தங்கள் கடந்த 14-15 நாட்களாக இவை அனைத்தும் ஒரு தவறான தீர்ப்பால் தானே. இதை கேள்வி கே...

தகுதியானவர் தலைமையேற்பார்அவர் தலைமையில் செயல்படுவோம்...

படம்
அன்புள்ள இரட்டை இலைக்காரனுக்கு, நம் கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பதில் உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு உள்ளது உண்மை தான்.  நாங்கள் சில விஷயங்களை மனதில் வைத்து அண்ணன் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நம் பெருமைமிகு அண்ணாதிமுகவை வழிநடத்த வேண்டுமென நினைக்கிறோம். நீங்களும் அவ்வாறு சிலவற்றை மனதிலிருத்தி, திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வரவேண்டுமென விரும்பலாம்.  யாரோ ஒருவர் நிச்சயமாக ஜெயிப்பர். இருவரில் ஒருவர் நிச்சயமாக தோற்பர். ஆனால் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படுவதே நிர்வாகத்திற்கு உகந்தது என்பதில் உறுதியாய் அனைத்துத் தொண்டர்களும் இருக்கிறார்கள். இருக்கட்டும். தவறில்லை.  இந்த நிர்வாக ரீதியலான பிரச்சினை ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் உறுதியாய். அன்றிலிருந்து மீண்டும் திமுகவை நோக்கி நம் இலக்கு பாயட்டும்.  முடிவு ஏற்படும் வரை நாங்களும் நீங்களும், எங்கள் கருத்தும் உங்கள் கருத்தும், மோதிக்கொள்ளட்டும். முடிவான பிறகு ஒருங்கிணைந்தே செயல்படுவோம் கழக இலக்கை நோக்கி.  இதில், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்கிற திமிரு வெற்றிபெற்ற தரப்புக்கும் தேவையி...