இடுகைகள்

காங்கிரஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுவாக காங்கிரஸ் வெல்வது நாட்டிற்கொன்றும் அவ்வளவு நல்ல செய்தியெல்லாம் இல்லை!

படம்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் யார் கை ஓங்கினாலும், அது அப்படியே MP தேர்தலிலும் எதிரொலிக்கும் எனச் சொல்லிவிட முடியாதென்பதே நம் கருத்து. ஆனால் indicator ஆக எடுத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான்.  ராஜஸ்தான் பொதுவா பிஜேபி காங்கிரஸ் மாறி மாறித்தான் வருகிறது கடந்த 20-25 வருடங்களாகவே. தற்போதைய காங்கிரஸின் அஷோக் கெலாட் ஆட்சி, மீண்டும் காங்கிரஸே என்கிற நிலைக்குக் கொண்டு செல்வாரா எனத் தெரியவில்லை.  ஆனால் நிறைய நல்ல விசயங்களை செய்திருப்பதுவும், சச்சின் பைலட்டை ராகுல் smooth ஆக handle செய்த விதமெல்லாம் காங்கிரஸுக்கு நல்ல பலம். பிஜேபியும் நல்ல பலத்துடன் சரிக்கு சரியாக மோதியிருக்கிறது. மீண்டும் காங்.ஜெயிக்குமென்றே தோன்றுகிறது. பார்ப்போம்.  மத்தியபிரதேஷம் போனமுறை காங்கிரசே அதிக எண்ணிக்கையில் ஜெயித்தது. சிந்தியாவைத் தூக்கி ஆட்சியைக் கவிழ்த்து அதற்கப்பறம் தேர்தல் என ஜனநாயகப் படுகொலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்த்தியது பிஜேபி. இந்த முறையும் கூட கடும் போட்டியே நிலவுகிறது. பிஜேபி ஜெயிக்குமென்றே நானினைக்கிறேன்.  சட்டீஸ்கர் கிட்ட கிட்ட வந்தாலும் காங்கிரஸ் வெல்லும்.  தெலுங...

ஜல்லிக்கட்டை பொழுதுபோக்கின் கொடூரமான வடிவம் என்றவர்களை பார்வையிட அனுமதிப்பது தமிழாகளுக்கு செய்யும் துரோகம்

படம்
ஜல்லிக்கட்டு "பொழுதுபோக்கின் கொடூரமான வடிவம்"  என்றவர்கள்  இன்று அதை பார்வையிட வருவது தான்  கொடூரம். ராகுல்காந்தி பொங்கல் அன்று மதுரை வந்து ஜல்லிக்கட்டை பார்வையிட வருவது, அதை இந்த தீய சக்தி தீமுக அனுமதித்தது தமிழர்களுக்கு திமுக செய்யும் மற்றுமொரு துரோகம். ஆம், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து peta வுடன் கை கோர்த்து தமிழர் பாரம்பரிய விளையாட்டை தடை ஆணை பெற பக்கப்பலமாக இருந்த கட்சிகளில் காங்கிரஸும் உண்டு என்பதற்கு கீழே உள்ள கடிதம் தான் சான்று. தமிழர் நலன், தமிழின அழிப்பு என இருந்த ராகுல் காந்தி குடும்பத்தை தமிழகம் என்றும் ஏற்காது. இவர்கள் தற்போது நீலி கண்ணீர் வடிப்பது தேர்தல் நாடகம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.