கண்டன பொதுக்கூட்டம்: சேலத்தில் முதலமைச்சர், தேனியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு
ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு துணை போன திமுக, காங்கிரஸ் கட்சிகளின் துரோகச் செயலை கண்டித்து தேனியில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சேலத்தில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டங்களில் மாவட்ட வாரியாக பேசுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கழக செய்தி தொடர்பாளர் டாக்டர். வைகை செல்வன் - தேனி, கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - சேலம், கழக அவைத்தலைவர், மதுசூதனன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் சமரசம் மற்றும் நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா - திருவள்ளூர். கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் கழக இலக்கிய அணி துணை செயலாளர் நிர்மலா அருள் பிரகாஷ் - காஞ்சிபுரம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் வேளாண் துறை அமைச்சர் துரை...