இடுகைகள்

தமிழகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் : முதல்வர்

படம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்; மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நம் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திடவும், உலக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவிடவும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் நல்வாழ்த்துகளை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.  கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். மேலும்., மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை, புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறையினரின் குடும்பங்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.