இடுகைகள்

NEET லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

NEET வேண்டுமா? வேண்டாமா? என்பதை விட கல்வியில் மேம்பாடு வேண்டும்!

தற்கொலை செய்து கொள்வது இந்தியாவில் சட்டப்படி தண்டனைக்குரியது... ஒரு பெண் 98+% மதிப்பெண் வாங்கும் ஒருவர் தற்கொலைக்கு செல்கிறாள் என்றால் அதற்கு இந்த சமுதாயம் அவளுக்கு கற்றுக்கொடுத்தது என்ன? 98+% மதிப்பெண் பெற்ற பெண்ணால் 6% மதிப்பெண் மட்டுமே பெற முடிகிறது என்றால் நாம் குறை கூற வேண்டியது NEET அல்ல நாம் படிக்கும் முறையை, வெட்கத்தை விட்டு சொல்கிறேன் Ohms law என்றால் என்ன என்பதை BE படிக்கும் போது தான் தெரிந்துகொண்டேன், ஆனால் நான் +2 வில் பெற்ற மதிப்பெண் 85+%. இது தான் கள நிலவரம். இதில் நாம் கற்கும் படிப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது. மதிப்பெண் தான் வாழ்க்கை எனும் கூற்றை உடைத்து, அவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை பரிசோதிக்க வேண்டும். இந்த NEET போன்று மத்திய அரசு 1000 போட்டி தேர்வுகள் கொண்டு நம்மை ஒடுக்க வந்தாலும் எதிர் கொள்ளும் திராணி வேண்டும் என சொல்லுவோம். #ADMK4ever