நீங்கள் மாறுங்கள் இல்லை மாற்றப் படுவீர்கள்....
தற்போது இருக்கும் கொரோனா இரண்டாம் அலைக்கு அதிமுக அரசு முதல் அலையிலேயே முற்று புள்ளி வைக்காததே காரணம் என்கிறார் தற்போதைய கையாலாகாத முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள். அரசு கிராம சபை கூட்டம் வேண்டாம் என்ற போது. முடியாது நாங்கள் கூட்டியே தீருவோம் என்று அரசியல் செய்து விட்டு இன்று பழியை தூக்கி முந்தைய அரசின் மீது போடுவதா?. அதிமுக அரசு அனுமதி கொடுக்காத திமுக மாநாட்டை காபந்து அரசு ஆனவுடன் வேக வேகமாக கூட்டி பல லட்சம் தமிழ் மக்களை ஒன்று கூட்டி (காசுக்கு கூட்டம் கூட்டுவது தான் தமிழ்நாட்டின் வழக்கம், அது யாராக இருந்தாலும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்) கொரோனா பரவலை அதிகரித்த பெருமை திரு. அப்போதைய எதிரி கட்சி தலைவரை தான் சாரும். ஏன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் கூட்ட வில்லையா என கேட்கும் சில தற்குறிகளுக்கு ஒரு விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதி மக்கள் மட்டுமே ஒன்று கூடினர். ஆனால் ஸ்டாலின் ஒரே இடத்தில் 10 தொகுதி மக்களை ஒரே இடத்தில் கூட்டி பிரச்சாரம் செய்தார். மேலும் திருச்சியில் நடந்த அந்த மாநாட்டில் தமிழ் ...