திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா??? பகுதி 1

திமுக சமூக நீதி கட்சியாக காட்டிகொள்வது போல் அப்படி தானா???

இதோ சில தரவுகள்...

* இஸ்லாம் என்ற மதம் இந்த உலகுக்கு தோன்றியது முதலே மக்களை நல்வழி படுத்த பல்வேறு நிலைகளில் முயற்சித்து வருகிறது. இருப்பினும் எல்லா மதங்களையும் போல இதுவும் காலத்திற்கு ஏற்றார் போல் மாறாமல் இருப்பது திமுக, முஸ்லிம் லீக் போன்ற தீய சக்திகளால் தான் என்பது என் கூற்று. திமுக மற்றும் முஸ்லிம் கட்சிகள் இவர்களை ஒரு ஓட்டு எண்ணிக்கையாகவே கருதுகிறது, எப்படி பாஜக ஹிந்து என்று சொல்லி ஏமாற்றி வாக்குகளை வாங்குகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதோ அதை போலவே. திமுக அவர்களுக்கு கட்சியில் ஒரு சிறு பிரதிநிதி த்துவம் கூட கொடுக்காது, ஆனால் அவர்களை தவறாக வழி நடத்தி அவர்களின் வாக்குகளை வாங்கும். அதிகாரம் என்பதை அவர்களுக்கு கொடுக்காமல் எப்போதும் பார்த்துக் கொள்ளும். கூட்டணி என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு சீட் கொடுத்து அவர்களை வெளியில் வைத்து கொள்ளும், இதற்கு அவர்களும் முட்டாளாக்கப்படுவார்கள். ஆனால் ராஜ்ய சபா MP பதவி, கட்சியில் நல்ல பதவி கொடுத்து முஸ்லிம்கள் முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு எதிரான மனநிலையை வைத்து கொள்ள இவர்கள் செய்யும் சித்து விளையாட்டுக்கு பெயர் தான் மதவாதம், அதுவும் முஸ்லிம் கட்சிகள் என்ற ஒன்றோடு கூட்டணி வைத்து கொண்டு பேசுவது தான் கொடூரம். 


அவர்களை பொது கட்சியில் உயர்ந்த இடத்தில் வைத்து மக்களோடு மக்களாக தான் வசிக்கும் சுற்றுப்புற சூழ்நிலையோடு மாற விடுவதே இல்லை. அவர்களை பழமை வாதாம் பேசி 100 ஆண்டுகள் பின் நோக்கி அழைத்து செல்லும் முயற்சியே இங்கு நடக்கிறது. இதில் திமுகவின் பங்கு அதிகம். எப்போதும் அவர்கள் அனைவரும் பொதுவான ஒரு கட்சியில் இணைய விடுவதே இல்லை. அவர்களை சமுதாயத்தை விட்டு பிரித்தே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் கட்சி திமுக மட்டுமே. இது அனைத்தும் அவர்களுக்கு தெரியவிடாமால் பார்த்துக் கொள்ளும் வேலையை அவர்களில் இருக்கும் சிலரை முஸ்லிம் கட்சிகள் என்ற பெயரில் பிரித்தாளும் சூழ்ச்சியை கையில் எடுத்து மிக கட்சிதமாக செய்துவருகிறது திமுக. இதற்கு அவர்களில் இருந்து ஒருவர் உருவாகி அதிமுக போன்ற சமுதாய நெறியோடு இருக்கும் கட்சியோடு சேர்ந்து அதிகாரம் பெரும்  காலம் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி. 

20% என்று சொல்லப்படும் வன்னியர் அதிகாரம் மிக்க அமைச்சர் பதவியில் இருக்கும் போது. 11% உள்ள முஸ்லிம் ஏன் அப்படி இல்லை. இதற்கு முதற் காரணம் திமுக மற்றும் முஸ்லிம் கட்சிகள் தான். இந்த நிலை மாற முஸ்லிம்கள் அதிமுக போன்ற சமுதாய நெறியோடு இருக்கும் கட்சியோடு சேர்ந்து அதிகாரம் பெரும்  காலம் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?