இடுகைகள்

ஓ பி எஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சசிகலாவை கொலை செய்ய சதியா??? அமமுக நிர்வாகிகள்

படம்
சசிகலாவை கொலை செய்ய சதியா??? சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த செய்தியை பரப்பும் நபர்கள் ஒன்று திமுக( அதில் அரசியல் இருக்கிறது, அதனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யம்), இரண்டு அமமுக தொண்டர்கள்.  அடேய் 4 வருடத்திற்கு முன் இதே குற்றச்சாட்டு உங்கள் சசிகலா மீதும் இருந்ததே??? அப்ப பிஜேபி யின் சொல் படி அம்மாவை கொன்றாரா உங்கள் சசிகலா??? அப்போது இல்லை இப்போது இருக்கிறதா??? உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???? இதுவரை, இல்லை!!! எப்போதும் திருமதி சசிகலா தான் அம்மாவை கொன்றார் என்ற கூற்று பொய்யானது என்று எப்போதும் சொல்லுவேன். உடல் நல குறைவு என்பது வர தான் செய்யும், அது என்று வரும் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு வேளை தான் வெளியே வர போகிறோம் என்ற மனமாற்றத்தால் கூட உடல் சுகவீனம் ஏற்பட்டு இருக்கலாம். பொது புத்தியில் பேசும் திரு. குருமூர்த்தி போன்று யோசிக்காமல். திருமதி. சசிகலா அவர்கள் உடல் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்போம். அவர் நேரடி அரசியலுக்கு வருவதை தான் எதிர்க்கின்றேனே ஒழிய, அவரே ஒழிய வேண்டும் என்று என்றும் இருந்தது கிட...

திருமதி சசிகலா அவர்கள் தன் தோழிக்கு கைமாறு செய்வாரா????

படம்
இதுவரை நான்(என்றும் அதிமுக தொண்டனாக) சசிகலா தான் நம் அம்மாவை கொன்றார் என்று எங்கும் பதிவு செய்தது இல்லை... மேலும், இதை குருமூர்த்தி தான் ஓபிஎஸ் வாயிலாக சொன்னார். இதனால் இங்கு நான் ஓ பி எஸ் அவர்களை தவறாக பதிவிடுவதாக கருத வேண்டாம், தான் உயிருக்கு உயிராக நினைத்த தன் அம்மாவின் மரணம் இப்படி சிலர் கூறுவதை கேட்டு உண்மை தானோ என்று நடப்பது என்பது மனிதனுக்கு இயல்பே. சிலர் வந்து இதற்கு என்னை திட்டலாம் ஆனால் உண்மை இதுவே. எப்பாடியாரும் இதை சொன்னது இல்லை. அம்மா உடல்நலம் பாதித்து தான் இறந்தார். ஆனால் அவரை TTV போன்றார் தவறாக வழி நடத்தி, ஜெயலலிதா போன்று வேடமிட்டு முதல்வர் ஆசை காட்டி, தன் நன்மதிப்பை தானே கெடுத்து கொண்டார்கள். இதனால் தான் முன்பே TTV யை அம்மா கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்தார்.  சசிகலா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வந்து அரசியலை விட்டு விலகி இருந்து அதிமுக ஆட்சி மீண்டும் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதுவே அவர் தன் தோழிக்கு செய்யும் கைமாறு.

நாம் ஏன் மீண்டும் எடப்பாடியார் வேண்டும் என்கிறோம்...

படம்
1. நல்ல நிர்வாக திறன் கொண்ட மனிதர் , இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொரோனா என்னும் கொடிய நோயை எதிர் கொண்ட விதம். மேலும் பேரிடர் மேலாண்மையில் இவர் கில்லி. முதலில் இவர் நம் கொடை. இப்பண்பு ஓ பி எஸ் அவர்களிடமும் இருப்பது என்பது அதிமுக விற்கு கூடுதல் பலம். உலக வல்லரசு நாடுகளே தோற்று போன இந்த கொரோனாவை தமிழக முதல்வர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது ஆனால் அதன் மூலம் வரும் இடர்களை தடுக்கலாம் என இந்த உலகுக்கு உணர்த்திய முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள். 2. நமது அம்மா மீது தொடர்ந்து திமுகவால் அவதூறாக கூறப்பட்ட சில விசயங்கள் எடப்பாடி மற்றும் ஓ பி எஸ் அவர்களிடம் கூற முடியாது. ஏனெனில் அவரை எளிதில் அணுக முடியாதவர் என்ற விமர்சனம் தொடர்ந்து திமுகவினால் வைக்கப்பட்டது. தற்போது அதை திமுகவினரால் கூற முடியாத அளவுக்கு எளிதில் அணுக கூடிய முதல்வராக திகழ்கிறார். எளிதில் அணுக கூடிய எளிய முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள். 3. மொத்தம் இதுவரை சுமார் 1 லட்சம் தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்த மனுக்கள், கோப்புகள் மற்றும் திட்ட அனுமதிகளை சாத்தி...

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொதுக்குழு உரை...

படம்
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல; சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்;  4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். ஸ்டாலினுடன் விவாதிக்க தயார். ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு. திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன்;  சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். நான் மட்டும் முதல்வர் அல்ல வெற்றி பெற்றால் அத்தனை பேரும் முதல்வர்தான் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சியுரை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைக்க வேண்டும் என்னை முதல்வராக அறிவித்த அத்தனை உள்ளங்களுக்கும், என்னை முதலமைச்சராக அறிவித்த ஓ.பி.எஸ் அண்ணன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி. உலகில் உள்ள அனைத்து கேடு கெட்ட செயல்களையும் செய்த தரம் கெட்ட தாத்தா, தந்தை வளர்த்த...