சசிகலாவை கொலை செய்ய சதியா??? அமமுக நிர்வாகிகள்

சசிகலாவை கொலை செய்ய சதியா???
சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த செய்தியை பரப்பும் நபர்கள் ஒன்று திமுக( அதில் அரசியல் இருக்கிறது, அதனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யம்), இரண்டு அமமுக தொண்டர்கள். 

அடேய் 4 வருடத்திற்கு முன் இதே குற்றச்சாட்டு உங்கள் சசிகலா மீதும் இருந்ததே??? அப்ப பிஜேபி யின் சொல் படி அம்மாவை கொன்றாரா உங்கள் சசிகலா???
அப்போது இல்லை இப்போது இருக்கிறதா??? உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா????

இதுவரை, இல்லை!!! எப்போதும் திருமதி சசிகலா தான் அம்மாவை கொன்றார் என்ற கூற்று பொய்யானது என்று எப்போதும் சொல்லுவேன். உடல் நல குறைவு என்பது வர தான் செய்யும், அது என்று வரும் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு வேளை தான் வெளியே வர போகிறோம் என்ற மனமாற்றத்தால் கூட உடல் சுகவீனம் ஏற்பட்டு இருக்கலாம். பொது புத்தியில் பேசும் திரு. குருமூர்த்தி போன்று யோசிக்காமல். திருமதி. சசிகலா அவர்கள் உடல் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்போம்.

அவர் நேரடி அரசியலுக்கு வருவதை தான் எதிர்க்கின்றேனே ஒழிய, அவரே ஒழிய வேண்டும் என்று என்றும் இருந்தது கிடையாது. அரசியல் என்பது நாடகம் ஆடி பெற முடியாது அது ஒரு வாழ்வியல். முற்றும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?