இடுகைகள்

Edappadi Palanisami லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதலமைச்சர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார், அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் - சமக தலைவர் & நடிகர் சரத்குமார்

படம்
வரும் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டி. அதிமுக கூட்டணியில் தற்போதும் நீடிக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும். மிகப்பெரிய தலைவர்கள் மறைந்த பிறகு, ஆட்சியை முதலமைச்சர் பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். அதிமுக மீது ஊழல் புகார் கொடுக்கும் திமுகவின் 2ஜி ஊழலை என்னவென்று சொல்வது?  - சரத்குமார்

எடப்பாடியார் ஏழைகளின் கைகளில் தவழும் Android Phone

படம்
எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் முதலமைச்சர் என்று அதிமுக உறுப்பினர் இன்பதுரை சட்டப்பேரவையில் பேசினார். தொழிலாளர் நலன் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இன்பதுரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல, எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் என்றார். இந்த ஆட்சி கலைந்து விடும் என்று கூறிவர்களுக்கு மத்தியில், லித்தியம் பேட்டரி போன்று நீடித்து நிலைக்க கூடியவர் முதலமைச்சர் என்று அவர் புகழாரம் சூட்டினார். ஒரு போன் சிறந்த போனாக இருக்க அதன் மதர்போர்டு சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும், அந்த வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மதர் போர்டாக இருந்து அவரை உருவாக்கியதால் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்றும் இன்பதுரை பாராட்டு தெரிவித்தார்.

10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் 5,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 312 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 12,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் என தெரிவித்தார். புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.