இடுகைகள்

Actress லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பைத்தியக்கார கூட்டமே! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே...

பைத்தியக்கார கூட்டமே உன்னை வைத்து தன் தொலைக்காட்சியை விளம்பர படுத்துகிறான் செயலியை பதிவிறக்கம் செய்ய வைக்கிறான் உன்னை ஒரு வியாபார ரீதியாக பார்க்கிறான்... ஆனால் நீ என் தலைவன் என் தளபதி என்று தன் வீட்டு தாய் தந்தையை விட்டு போகும் கூட்டமே... உண்மையின் நிலை தெரியாமல் உன்னை ஏமாற்றும் கூத்தாடி பின் நிற்கும் பேதைகளே... கலை ரசிக்கப்பட வேண்டியதே போற்றப்பட வேண்டியதே, ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே... என்று உணர்வார்களோ... முன்பு படம் வெளியாகும் போது மட்டுமே அரங்கேறிய அவலம், இன்று First look, motion poster, teaser, trailer, audio, film preview என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். இல்லை ஏமாறுகிறார்கள்... #ADMK4ever

சினிமாவின் அவலம்.... காட்சி பொருளாகும் நடிகைகள்....

(முன்னணி) நடிகர்களே! இயக்குனர்களே! திரை உலகில் பெண்களுக்கு (நடிகை) உரிய பாதுகாப்பு இல்லை என்றும், அவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்த படுகிறார்கள் என்றும், வாய்ப்புக்காக adjust செய்ய வேண்டியுள்ளது என்றும்.... இதெல்லாம் நான் சொல்லலப்பா... ஒரு சில தைரியம் கொண்ட பெண்கள் சினிமாத்துறையால் துன்புற்றவர்கள் சொன்னது... இது தங்களுக்கு தெரிந்ததே... ஏன் இதை எல்லாம் உங்களால் தடுக்க முடியவில்லை... குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா?? தயாரிப்பாளர்கள் இயக்குனர்களை பகைத்து கொண்டால் வாய்ப்பு போய் விடும் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடீர்களா? இப்போது எந்த முகத்தோடு பொது அரசியல் பேச சமூகவலைத்தளம் வந்துவிடீர்கள்?? தன் முதுகில் உள்ள அழுக்கை முதலில் துடைக்க முடியவில்லை வந்துவிட்டார்கள் வியாக்கியானம் பேச... பெண் தமிழ் சினிமா துறையில் இன்னும் விளம்பர பொருளாகவே பார்க்கப்படும் அவலம் தொடற்கதையே... என்னையும் என்னை போன்றோரையும் அப்படியே பழக்கிய ஒரு சமூக துரோகிகள் நீங்கள் என்பதை மனதில் வைத்து கொண்டு இதை எல்லாம் சரி செய்து விட்டு பொது அரசியல் பேச வாருங்கள்... சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம் உங்...