இடுகைகள்

AMMK லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சசிகலாவை கொலை செய்ய சதியா??? அமமுக நிர்வாகிகள்

படம்
சசிகலாவை கொலை செய்ய சதியா??? சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த செய்தியை பரப்பும் நபர்கள் ஒன்று திமுக( அதில் அரசியல் இருக்கிறது, அதனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யம்), இரண்டு அமமுக தொண்டர்கள்.  அடேய் 4 வருடத்திற்கு முன் இதே குற்றச்சாட்டு உங்கள் சசிகலா மீதும் இருந்ததே??? அப்ப பிஜேபி யின் சொல் படி அம்மாவை கொன்றாரா உங்கள் சசிகலா??? அப்போது இல்லை இப்போது இருக்கிறதா??? உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???? இதுவரை, இல்லை!!! எப்போதும் திருமதி சசிகலா தான் அம்மாவை கொன்றார் என்ற கூற்று பொய்யானது என்று எப்போதும் சொல்லுவேன். உடல் நல குறைவு என்பது வர தான் செய்யும், அது என்று வரும் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு வேளை தான் வெளியே வர போகிறோம் என்ற மனமாற்றத்தால் கூட உடல் சுகவீனம் ஏற்பட்டு இருக்கலாம். பொது புத்தியில் பேசும் திரு. குருமூர்த்தி போன்று யோசிக்காமல். திருமதி. சசிகலா அவர்கள் உடல் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்போம். அவர் நேரடி அரசியலுக்கு வருவதை தான் எதிர்க்கின்றேனே ஒழிய, அவரே ஒழிய வேண்டும் என்று என்றும் இருந்தது கிட...

திருமதி சசிகலா அவர்கள் தன் தோழிக்கு கைமாறு செய்வாரா????

படம்
இதுவரை நான்(என்றும் அதிமுக தொண்டனாக) சசிகலா தான் நம் அம்மாவை கொன்றார் என்று எங்கும் பதிவு செய்தது இல்லை... மேலும், இதை குருமூர்த்தி தான் ஓபிஎஸ் வாயிலாக சொன்னார். இதனால் இங்கு நான் ஓ பி எஸ் அவர்களை தவறாக பதிவிடுவதாக கருத வேண்டாம், தான் உயிருக்கு உயிராக நினைத்த தன் அம்மாவின் மரணம் இப்படி சிலர் கூறுவதை கேட்டு உண்மை தானோ என்று நடப்பது என்பது மனிதனுக்கு இயல்பே. சிலர் வந்து இதற்கு என்னை திட்டலாம் ஆனால் உண்மை இதுவே. எப்பாடியாரும் இதை சொன்னது இல்லை. அம்மா உடல்நலம் பாதித்து தான் இறந்தார். ஆனால் அவரை TTV போன்றார் தவறாக வழி நடத்தி, ஜெயலலிதா போன்று வேடமிட்டு முதல்வர் ஆசை காட்டி, தன் நன்மதிப்பை தானே கெடுத்து கொண்டார்கள். இதனால் தான் முன்பே TTV யை அம்மா கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்தார்.  சசிகலா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வந்து அரசியலை விட்டு விலகி இருந்து அதிமுக ஆட்சி மீண்டும் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதுவே அவர் தன் தோழிக்கு செய்யும் கைமாறு.

Election 2019 Tamilnadu

என் பார்வையில்.... வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-5% வாக்கு வாங்கும் என தோன்றுகின்றது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் இது அவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் தான். தேர்தல் 2019ல் நாடாளுமன்ற, சட்டமன்ற அதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது நடக்கும் ஆட்சி 2019 வரை நீடிக்கும் என்றே கருதுகிறேன். ஆனால் இந்த ஆட்சி மீண்டும் வருமா என்பதை இனி வரும் காலங்களில் இவர்களின் செயல்பாடு மட்டுமே நடத்த கசப்புகளை மறக்க செய்தால் பார்க்கலாம். ஊடகம் எந்த பக்கம் இருக்கும் என்பதை பொருத்தும் 5-10 % வெற்றி அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  இதுவரை திமுக கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். மேலும் இரண்டாம் இடம் எப்போதும் போல் அஇஅதிமுக வரவே வாய்ப்புள்ளது. மூன்றாவது இடத்திற்கு கடும் போட்டி இருக்கும் என்றே தோன்றுகிறது. டெல்டா பகுதியில் நல்ல பலம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு அமமுக வர வாய்ப்புள்ளது, ஆனால் வெற்றி பெருவார்களா என்பதை காத்திருந்தே பார்க்க முடியும். நடிகர்களின் புது கட்சிகளும் எங்கு இ...