டாக்டர் வி.சாந்தா மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் அறிக்கை, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இவர் தனது வாழ்நாள் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலையில்லாமலும், குறைந்த செலவிலும் மருத்துவசேவை ஆற்றியவர். தனது தன்னலமற்ற சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ள டாக்டர் வி.சாந்தா அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மருத்துவர் வி.சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமைசேர்க்கும் வகையிலும், அவரது தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன். முதல்வர் எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் அறிக்கை