இடுகைகள்

ஓ பன்னீர்செல்வம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா நினைவிடம் திறப்பு விழா

படம்
பினிக்ஸ் பறவையை போல காட்சியளிக்கும் புரட்சித்தலைவி நினைவிடம் ஜனவரி 27 காலை 11 மணிக்கு திறப்பு! சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27 இல் திறக்கப்படுவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்ளது.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பினிக்ஸ் பறவையை போல காட்சியளிக்கும் நினைவிடத்தை, ஜனவரி 27 காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்தற்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒஎம்ஆர், இசிஆர் சாலை வழியாக வரும் அதிமுகவினரின் வாகனங்கள் கலங்கரை விளக்கம் வரை அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு வலதுபக்கம் திரும்பி சீனிவாசபுரம...

அம்மா நினைவிடம் வரும் 27 ஆம் தேதி திறப்பு மாண்புமிகு அண்ணன் OPS முன்னிலையில் மாண்புமிகு அண்ணன் EPS அவர்கள் திறந்து வைக்கிறார்

படம்
"இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் நினைவிடத்தை வரும் 27.01.2021 அன்று காலை 11.00 மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைக்க உள்ளார் மாண்புமிகு தமிழக துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். - தமிழக அரசு

அதிமுகவின் வழி காட்டுதல் குழுவின் அதிகாரம்:

படம்
அதிமுகவின் வழி காட்டுதல் குழுவின் அதிகாரம்: 1. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் அதிகபட்சம் 11 பேர் மட்டுமே இடம் பெற வேண்டும், 2. வழிகாட்டுதல் குழுவில் உள்ள 11 பேரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நியமிக்கவோ, நீக்கவோ முடியும். 3. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும், 4. 11 பேர் 5 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னர், மீண்டும் அதே பொறுப்புக்கு நியமிக்க தடை ஏதுமில்லை, 5. கட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்குதல் கொள்கைகள் வடிவமைத்தல், ஆகியவை வழிகாட்டுதல் குழுவின் பணிகளாகும்.

அதிமுகவின் வழி காட்டுதல் குழு:

படம்
அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழி காட்டுதல் குழு அமைத்து கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலின் பெயரில் அக்டோபர் 7 ஆம் தேதி 2020 அன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார். இதற்கு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  குழுவில்  1. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 2. அமைச்சர்  தங்கமணி, 3. அமைச்சர்  எஸ்.பி வேலுமணி, 4. அமைச்சர்  ஜெயக்குமார், 5. அமைச்சர்  சி.வி.சண்முகம், 6. அமைச்சர்  காமராஜ், 7. ஜேசிடி பிரபாகர் – முன்னாள் எம்.எல்.ஏ 8. மனோஜ் பாண்டியன் 9. பா மோகன் – முன்னாள் அமைச்சர் 10. ரா. கோபால கிருஷ்ணன் முன்னாள் எம்.பி 11. கி மாணிக்கம் – சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தலைவர்கள் திருவள்ளுவர் தின வாழ்த்துகள்

படம்
முப்பாலில் முக்காலமும் உணர்த்திய தெய்வப்புலவர். உலகிற்கான பொதுமறையை தந்து தாய்த்தமிழின் அருமையை உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற முதற்பாவலரான திருவள்ளுவர் பெருந்தகையின் தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன். - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு: தமிழர்களின் சிறப்புமிக்க நாளான திருவள்ளுவர் தினத்தில் அறம்,பொருள், இன்பமோடு மனித வாழ்வியலை கூறும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அருளிய வள்ளுவப் பெருந்தகை திருவள்ளுவரை போற்றி வணங்கி, அவர் காட்டிய அறவழியினைப் பின்பற்றுவோம். - துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார், தலைவர்கள் இரங்கல்

படம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், சிறந்த பண்பாளருமான திரு.ஞானதேசிகன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திரு.ஞானதேசிகன் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். - கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸின் துணை தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் துயர செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்வதோடு குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். - கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். அரசின் சார்பிலும் அஇஅதிமுக சார்பிலும் திரு. மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. Mafoi பாண்டியராஜன் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் துணை முதல்வரை வாழ்த்திய முதல்வர்

படம்
தமிழகத்தின் துணை முதல்வர், கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் பெற்று பூரண நலத்துடன் மகிழ்வுடன் வாழ  தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் தமிழக முதல்வரும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும் அண்ணன் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிச்சாமி.

இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!!

படம்
அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் கழகம் சார்பில், இதயங்கனிந்த "பொங்கல் திருநாள்" நல்வாழ்த்துகள்! இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!!

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கழக ஒருங்கிணைப்பாளர்...

படம்
டாக்டர் MGR பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா விழாவைச் சிறப்பித்த  மாண்புமிகு துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகிகள் டாக்டர் SAC சண்முகம் மற்றும் திரு ACS அருண் குமார் கௌரவித்தனர்.  பின்னர் மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

எங்கள் ஐயா ஓ பன்னீர்செல்வம் அவர்களை பற்றி நாளிதழில்...

படம்
நன்றி: தினத்தந்தி