ஜல்லிக்கட்டை பொழுதுபோக்கின் கொடூரமான வடிவம் என்றவர்களை பார்வையிட அனுமதிப்பது தமிழாகளுக்கு செய்யும் துரோகம்

ஜல்லிக்கட்டு "பொழுதுபோக்கின் கொடூரமான வடிவம்" என்றவர்கள் இன்று அதை பார்வையிட வருவது தான் கொடூரம். ராகுல்காந்தி பொங்கல் அன்று மதுரை வந்து ஜல்லிக்கட்டை பார்வையிட வருவது, அதை இந்த தீய சக்தி தீமுக அனுமதித்தது தமிழர்களுக்கு திமுக செய்யும் மற்றுமொரு துரோகம். ஆம், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து peta வுடன் கை கோர்த்து தமிழர் பாரம்பரிய விளையாட்டை தடை ஆணை பெற பக்கப்பலமாக இருந்த கட்சிகளில் காங்கிரஸும் உண்டு என்பதற்கு கீழே உள்ள கடிதம் தான் சான்று. தமிழர் நலன், தமிழின அழிப்பு என இருந்த ராகுல் காந்தி குடும்பத்தை தமிழகம் என்றும் ஏற்காது. இவர்கள் தற்போது நீலி கண்ணீர் வடிப்பது தேர்தல் நாடகம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.