இடுகைகள்

ஜெயலலிதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்

படம்
புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்...... 1)பெண் சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைகள் திட்டம். 2)மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம். 3)பெண்களின் பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள். 4)இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம். 5)விலையில்லா அரிசி. 6)குறைந்த விலையில் அம்மா குடிநீர். 7)பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள். 8)கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம். 9)அம்மா உணவகங்கள். 10)பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி. 11)விலையில்லா பாடப் புத்தகங்கள். 12)முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு. 13)மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம். 14)அம்மா திட்ட முகாம்கள். 15)ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு. 16)பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம். 17)விலையில்லா மிக்ஸி. 18)விலையில்லா கிரைண்டர். 19) விலையில்லா மின்விசிறி. 20)மாணவர்களுக்கு இலவச காலணிகள் கல்வி உபகரணங்கள். 21) முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியை உறுபடுத்தியது. 22)மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம். 23)அம்மா பூங்காக்கள்...

திமுக கடைசியாக மூக்குடைப்பட்டது ரோசய்யாவிடம்தான்

படம்
மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நடந்துகொண்டிருந்த காலகட்டம் (2011) தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கட்சியாக படுதோல்வியடைந்திருந்தது. ஆளும் அதிமுக அரசிற்கு குடைச்சல் கொடுக்க கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. ( 2011 ஆகஸ்ட்) தமிழ்நாட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிமுக அரசுடன் இணைந்து இனக்கமாக செயல்பட தொடங்கினார் ரோசய்யா. இந்த எதிர்பாராத டுவிஸ்ட்டை கருணாநிதியே எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தற்போது ஆளுநர் ரவிக்கு எதிராக ஸ்டாலின் ஆள் வைத்து முரசொலியில் எழுதிவரும் 'கொக்கென கோண வாயா, நக்கென நாராவாயா' பாணியில் கருணாநிதி தனக்குத்தானே கேள்வி பதில் என்ற பெயரில் முரசொலியில் ரோசய்யாவை கழுவி ஊற்றினார். ரோசய்யாவை திரும்பப் பெறக்கோரி சோனியாவிற்கு தொடர்ச்சியாக கடிதங்களாக எழுதித்தள்ளினார். அப்போது 2G உரசல்கள் திமுக காங்கிரஸ் இடையே விஸ்வரூபம் எடுத்திருந்த காலகட்டம் என்பதால் சோனியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடைசிவரை ரோசய்யாவை கரித்துக்கொட்டிக் கொண்டி...

அதிமுகவின் தேசிய பெண் குழந்தைகள் தினம்

படம்
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் பெண்களின் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்திய 11 திட்டங்கள் 1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்  3. தொட்டில் குழந்தை திட்டம் 4. சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம் 5. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் 6. மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் 7. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் 8. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் 9. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்! 10.வெற்றிப் பெண்மணி தந்த விருதுகள் 11. அம்மா இருசக்கர வாகன திட்டம் இந்த இனிய தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தில் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் அவர் செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவோம் பாலமுருகன் . J, தலைவர், வடசென்னை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும்

படம்
புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளான பிப். 24 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.  - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு

அம்மாவின் உருவச்சிலை திறப்பு

படம்
அம்மாவின் உருவச்சிலை திறப்பு காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு 'ஜெயலலிதா வளாகம்' என பெயர் சூட்டி திறப்பு. அம்மாவின் 9 அடி நீலம் கொண்ட முழு உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அம்மா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லம் ஆனது

படம்
அம்மா புரட்சி தலைவி மாண்புமிகு மக்களின் தாய் குலதெய்வம் செல்வி  ஜெ ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் நினைவு இல்லம் ஆனது குத்துவிளக்கு ஏற்றி முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஜனவரி 28 2021 காலை 10:30 மணிக்கு திறந்து வைத்தனர். நினைவு இல்ல கல்வெட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். நீதிமன்ற வழக்கு முடிந்தவுடன் வேதா நிலையம் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும். வேதா நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்: வேதா நிலையம் 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள வீடு ஆகும். அங்கு நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். இங்கு 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன. சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான பிள...

என்ன செய்தார் அம்மா அவருக்கு போய் 80 கோடி செலவில் நினைவிடம் அமைக்க????

படம்
என்ன செய்தார் அம்மா அவருக்கு போய் 80 கோடி செலவில் நினைவிடம் அமைக்க???? ஒன்றா இரண்டா... 2035 இல் பெற வேண்டிய பெண்கள் முன்னேற்றத்தை 2021இல் அம்மாவின் அரசு எப்படி சாத்தியப் படுத்தியது  என்று சொல்லும் அளவுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு எண்ணில் அடங்கா திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தியுள்ளது... 1. பெண்களின் வேலை பளுவை குறைக்க மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்து அவர்களை பழக்கப் படுத்திய அரசு அம்மாவின் அரசு, 2. உள்ளாட்சி அமைப்பில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு, 3. அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்கிய அரசு அம்மாவின் அரசு, 4. வேலைக்கு போகும் பெண்களுக்கு 50% மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கும் அரசு அம்மாவின் அரசு, 5. படித்த பட்டதாரி மாணவிகளுக்கு தாலிக்கு தங்கம், 50 ஆயிரம் வரை கல்யாண பணம் வழங்கும் அரசு அம்மாவின் அரசு, 6. வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து தாய் மார்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பெயரிலும் தலா 1 லட்சம் நீண்ட கால வைப்பு நிதி ஒதுக்கீடு செய்து, அவர்களின் மேல் படிப்புக்கு க...

அம்மா நினைவிடம் திறப்பு விழா

படம்
பினிக்ஸ் பறவையை போல காட்சியளிக்கும் புரட்சித்தலைவி நினைவிடம் ஜனவரி 27 காலை 11 மணிக்கு திறப்பு! சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27 இல் திறக்கப்படுவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்ளது.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பினிக்ஸ் பறவையை போல காட்சியளிக்கும் நினைவிடத்தை, ஜனவரி 27 காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்தற்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒஎம்ஆர், இசிஆர் சாலை வழியாக வரும் அதிமுகவினரின் வாகனங்கள் கலங்கரை விளக்கம் வரை அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு வலதுபக்கம் திரும்பி சீனிவாசபுரம...

அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ; வெற்றி மட்டுமே இலக்கு’ ஓ பி எஸ் சூளுரை

படம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ‘ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பிள்ளையார் சுழி போடுவது அம்மா பேரவை தான். யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை. அதிமுகவுக்கு 30 ஆண்...

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொதுக்குழு உரை...

படம்
அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல; சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்;  4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். ஸ்டாலினுடன் விவாதிக்க தயார். ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு. திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன்;  சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். நான் மட்டும் முதல்வர் அல்ல வெற்றி பெற்றால் அத்தனை பேரும் முதல்வர்தான் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சியுரை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைக்க வேண்டும் என்னை முதல்வராக அறிவித்த அத்தனை உள்ளங்களுக்கும், என்னை முதலமைச்சராக அறிவித்த ஓ.பி.எஸ் அண்ணன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி. உலகில் உள்ள அனைத்து கேடு கெட்ட செயல்களையும் செய்த தரம் கெட்ட தாத்தா, தந்தை வளர்த்த...

ஜெ எனும் சகாப்தம்...

படம்
69% இடஒதுக்கீடு வேண்டும் அம்மாவின் புகைப்படம் வேண்டாமோ... பெண்களின் முன்னேற்றத்திற்கு அறிய பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் என்பதில் மாற்று கருத்து உண்டோ... தைரிய...