அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ; வெற்றி மட்டுமே இலக்கு’ ஓ பி எஸ் சூளுரை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.


இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ‘ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பிள்ளையார் சுழி போடுவது அம்மா பேரவை தான். யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை. அதிமுகவுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டை ஆளும் உரிமையை மக்கள் வழங்கியுள்ளார்கள். அந்த பெருமை அதிமுகவிற்கு மட்டுமே உண்டு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியை பின் தொடர்ந்தால் நம்மை வெல்ல யாரும் இல்லை. தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சி இருக்கிறது. அதற்கும் தலைவர்கள் உள்ளார்கள். அவர்கள் பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்று பார்க்கிறோம். ஆனால் ஜெயலலிதா பிறந்த நாளில் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்

நாம் 1,000 பேருக்கு கொடுத்தால் தான் நம்மை பார்த்து மற்ற கட்சிகள் ஒன்று இரண்டு கொடுக்கும். சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்து வெற்றி பெறுவோம். அதிமுகவில் உள்ள சிறு சிறு அண்ணன் தம்பி பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்வோம்..வெற்றி மட்டுமே இலக்கு’ என்று தெரிவித்தார்.

தலைமை கழக செய்தி:

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?