7 பேர் விடுதலை

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு * ஒவ்வொருவருக்கும் 4 தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன * 7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஞாயிறு (9th Sep 2018) அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது On 9th Sep 2018, Sunday: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அற்புதம்மாள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 28 ஆண்டு காலமாக இருந்த வலி, வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா பாதி நிம்மதி கொடுத்தார் என்றால் எடப்பாடி பழனிசாமி எனக்கு முழு நிம்மதி கொடுத்துள்ளார். 28 ஆண்டு காலமாக அல்லாடி கொண்டிருந்தேன். தற்போது நிம்மதி கிடைத்துள்...