என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்???

என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்??? ஸ்டாலின் பதவி ஏற்று இன்றோடு இருபது நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இவரின் செயல்கள்யாவும் முன்னரே ஒரு குழுவால் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பத்திரிக்கையாளர்கள் தன் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் நடத்தும் வேலையை மட்டுமே அதிகம் செய்து வருகிறார். ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே இதுவரை செய்ய வில்லை என்பதே உண்மை. இது எதிரி கட்சியாக இருக்கும் போது கைகொடுக்கும் ஆனால் இதையே நீங்கள் செய்து வந்தால் தமிழ் மக்கள் தங்கள் வேலையை காட்ட தொடங்குவார்கள் என்பது வரும் தேர்தல்கள் உங்களுக்கு உணர்த்தும். இதுவரை இவர் என்ன செய்து விட்டார் என்று ஆகா ஓகோ என்று ஊடகங்கள் ஊடகவியாளர்கள் சொல்லுகின்றனர் என்று பார்த்தால் ஓர் மிக பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஏன் என்றால் இவர் அடித்த சிக்சர்கள் ( இப்படியே அதிகமாக பத்திரிக்கை நண்பர்கள் அவரின் செயலுக்கு உவமை படுத்தி கூறுகின்றனர்) முன்பே அடித்த சிக்ஸர்கள், நடைமுறையில் இருக்கும் சிக்சர்கள், சாத்தியமில்லாத வெறும் காகித சிக்ஸர்கள், மத்திய அரசை வலியுறுத்தும் சிக்...