அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்கள் இலவச 2 ஜிபி data பெறுவது???? இதோ....

நாள் ஒன்றுக்கு இரண்டு ஜிபி டேட்டா வழங்குவதற்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக, முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், பி.எஸ்.என்.எல், வோடாஃபோன் - ஐடியா போன்றவற்றுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள ஏதுவாக பிரத்யேக இணையதளம் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. அந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது தொலைபேசி எண், ஆதார் எண், கல்லூரி அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்ற விபரங்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. மாணவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டவுடன், அரசிடமிருந்து மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அத்தனை மாணவர்களுக்கும் சேர்த்து, 6 மாதங்களுக்கு இத்திட்டத்துக்கான மொத்த செலவு 80ல் இருந்து 100 கோடி ரூபாய் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா பேக்கை அரசு வழங்குவது இதுவே முதல்முறை. பெருந்தொற்று காலத்தில் இணையவழி வகுப்புகள் மூலம் கல்வி கற்றிட அரசால் வழங்கப்படும...