இடைத்தேர்தல் தோல்வியின் போது கருணாநிதி எழுதிய கடிதம் ஒரு நினைவூட்டல்

கருணாநிதி எழுதிய கடிதம்: அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும், அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட வைத்தார்கள். ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரசின் இலவச உதவிப் பொருள்களான மிக்ஸிகள், கிரைண்டர்கள், மின் விசிறிகள் போன்றவை அந்தத் தொகுதிக்குள் கொண்டு சென்றதை 11/11/2013 தேதிய "தினமலர்" நாளேடே வெளியிட்டிருந்தது. ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்க ளின் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடவே இல்லை. தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக கொடி கட்டிய காரில் வந்தபோது, அமைச்சருக்குப் பாதுகாப்பாக காவல் துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு அரசு ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தினர். அதிமுக வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, நாற்பதுக்கும் மேற்பட்ட அதிமுக கொடி கட்டிய கார்கள் தேர்தல் விதி முறைகளை மீறி வந்தன. 13/11/2013 அன்று பகல் 12 மணியளவில் அனைத்து அமைச்ச...