பிரதமரை சந்தித்து தமிழகத்தின் நலன் குறித்தும் மற்றும் புயலுக்கு நிவாரண நிதி கோரினார் முதல்வர், அரசியல் சந்திப்பு இல்லை என திட்டவட்டம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களது படகுகளை திரும்பப் பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மாண்புமிகு பாரதப் பிரதமர் நரந்திரமோடி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். நிவர்,புரெவி புயல் பாதிப்புகள் மற்றும் அதீத மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதியுதவி அளிக்குமாறும், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோவுக்கு ரூ.99.60 லிருந்து ரூ.150 உயர்த்தவும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், "நடந்தாய் வாழி காவிரி" திட்டம், சென்னை மெட்ரோரயில் திட்டம்-II உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் மாண்புமிகு பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். அவர் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்: சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூற...