தலைவர்கள் திருவள்ளுவர் தின வாழ்த்துகள்

முப்பாலில் முக்காலமும் உணர்த்திய தெய்வப்புலவர். உலகிற்கான பொதுமறையை தந்து தாய்த்தமிழின் அருமையை உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற முதற்பாவலரான திருவள்ளுவர் பெருந்தகையின் தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன். - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு: தமிழர்களின் சிறப்புமிக்க நாளான திருவள்ளுவர் தினத்தில் அறம்,பொருள், இன்பமோடு மனித வாழ்வியலை கூறும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அருளிய வள்ளுவப் பெருந்தகை திருவள்ளுவரை போற்றி வணங்கி, அவர் காட்டிய அறவழியினைப் பின்பற்றுவோம். - துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்