இடுகைகள்

அதிமுக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?

படம்
சசிகலா, இனி என்ன செய்ய முடியும்? லட்சுமணன், லட்சுமி, தராசு சியாம் போன்றோர் திமுகவின் கைப்பாவையாக இருந்து அதிமுகவை அழிக்க திட்டமிட்டு ஊடகங்களில் உருவாக்கிய பிம்பம் தான் "சசிகலா". ஆனால் உண்மையில் சசிகலாவை பெரிதும் யாரும் ரசிக்கவில்லை, அமமுக தொண்டர்கள் மற்றும் இவரின் சமுதாயத்தினர் சிலர் நீங்கலாக. இவரின் சமுதாயத்தினர் இவர் மீது ஒரு மரியாதை கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அதை அவர் காப்பாற்றும் அளவுக்கு நடந்து கொள்கிறாரா என்றால், இல்லை என்பதே உண்மை. அரசியல் என்பது செஸ் விளையாட்டை போன்றது, ஒரு move தவறாக அல்லது அவசரப்பட்டு வைத்து விட்டால் காலியாகி போவோம். சசிகலா ஒரு move இல்லை பல move களை தவறாக வைத்து விட்டார். முதலில் இவர் முதல்வர் ஆக ஆசைப்பட்டது முதல், நம் ஓ பன்னீர்செல்வம் அவர்களை முதல்வர் பதவியை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது, நம் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை முதல்வர் ஆக்கியது, அமமுக என்னும் கட்சியை விமர்சனம் செய்யாதது வரை அனைத்துமே இவர் செய்த தவறான move தான். கடைசியாக தேர்தலுக்கு முன் ஓய்வு அறிவிப்பு தொடர்ந்து தேர்தலுக்கு பின் அரசியல் பிரவேசம் என்பது எல்லாமே இ...

புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்

படம்
புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்...... 1)பெண் சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைகள் திட்டம். 2)மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம். 3)பெண்களின் பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள். 4)இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம். 5)விலையில்லா அரிசி. 6)குறைந்த விலையில் அம்மா குடிநீர். 7)பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள். 8)கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம். 9)அம்மா உணவகங்கள். 10)பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி. 11)விலையில்லா பாடப் புத்தகங்கள். 12)முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு. 13)மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம். 14)அம்மா திட்ட முகாம்கள். 15)ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு. 16)பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம். 17)விலையில்லா மிக்ஸி. 18)விலையில்லா கிரைண்டர். 19) விலையில்லா மின்விசிறி. 20)மாணவர்களுக்கு இலவச காலணிகள் கல்வி உபகரணங்கள். 21) முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியை உறுபடுத்தியது. 22)மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம். 23)அம்மா பூங்காக்கள்...

திமுக கடைசியாக மூக்குடைப்பட்டது ரோசய்யாவிடம்தான்

படம்
மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நடந்துகொண்டிருந்த காலகட்டம் (2011) தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கட்சியாக படுதோல்வியடைந்திருந்தது. ஆளும் அதிமுக அரசிற்கு குடைச்சல் கொடுக்க கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. ( 2011 ஆகஸ்ட்) தமிழ்நாட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிமுக அரசுடன் இணைந்து இனக்கமாக செயல்பட தொடங்கினார் ரோசய்யா. இந்த எதிர்பாராத டுவிஸ்ட்டை கருணாநிதியே எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தற்போது ஆளுநர் ரவிக்கு எதிராக ஸ்டாலின் ஆள் வைத்து முரசொலியில் எழுதிவரும் 'கொக்கென கோண வாயா, நக்கென நாராவாயா' பாணியில் கருணாநிதி தனக்குத்தானே கேள்வி பதில் என்ற பெயரில் முரசொலியில் ரோசய்யாவை கழுவி ஊற்றினார். ரோசய்யாவை திரும்பப் பெறக்கோரி சோனியாவிற்கு தொடர்ச்சியாக கடிதங்களாக எழுதித்தள்ளினார். அப்போது 2G உரசல்கள் திமுக காங்கிரஸ் இடையே விஸ்வரூபம் எடுத்திருந்த காலகட்டம் என்பதால் சோனியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடைசிவரை ரோசய்யாவை கரித்துக்கொட்டிக் கொண்டி...

அதிமுகவின் தேசிய பெண் குழந்தைகள் தினம்

படம்
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் பெண்களின் முன்னேற்றத்திற்கு மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்திய 11 திட்டங்கள் 1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்  3. தொட்டில் குழந்தை திட்டம் 4. சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம் 5. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் 6. மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் 7. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் 8. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் 9. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்! 10.வெற்றிப் பெண்மணி தந்த விருதுகள் 11. அம்மா இருசக்கர வாகன திட்டம் இந்த இனிய தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தில் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் அவர் செயல்படுத்திய திட்டங்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவோம் பாலமுருகன் . J, தலைவர், வடசென்னை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

நீங்கள் மாறுங்கள் இல்லை மாற்றப் படுவீர்கள்....

படம்
தற்போது இருக்கும் கொரோனா இரண்டாம் அலைக்கு அதிமுக அரசு முதல் அலையிலேயே முற்று புள்ளி வைக்காததே காரணம் என்கிறார் தற்போதைய கையாலாகாத முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள்.  அரசு கிராம சபை கூட்டம் வேண்டாம் என்ற போது. முடியாது நாங்கள் கூட்டியே தீருவோம் என்று அரசியல் செய்து விட்டு இன்று பழியை தூக்கி முந்தைய அரசின் மீது போடுவதா?. அதிமுக அரசு அனுமதி கொடுக்காத திமுக மாநாட்டை காபந்து அரசு ஆனவுடன் வேக வேகமாக கூட்டி பல லட்சம் தமிழ் மக்களை ஒன்று கூட்டி (காசுக்கு கூட்டம் கூட்டுவது தான் தமிழ்நாட்டின் வழக்கம், அது யாராக இருந்தாலும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்) கொரோனா பரவலை அதிகரித்த பெருமை திரு. அப்போதைய எதிரி கட்சி தலைவரை தான் சாரும்.  ஏன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் கூட்ட வில்லையா என கேட்கும் சில தற்குறிகளுக்கு ஒரு விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதி மக்கள் மட்டுமே ஒன்று கூடினர். ஆனால் ஸ்டாலின் ஒரே இடத்தில் 10 தொகுதி மக்களை ஒரே இடத்தில் கூட்டி பிரச்சாரம் செய்தார். மேலும் திருச்சியில் நடந்த அந்த மாநாட்டில் தமிழ் ...

என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 2)

படம்
பகுதி 1 படிக்க:  http://admk4ever.blogspot.com/2021/05/ttv.html TTV தினகரன் திமுகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு 10.5% வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக தென் மாவட்டங்களில் இவர் பிரச்சாரம் செய்த காரணங்களால் அதிமுக பெரும்பான்மை இடங்களில் தோல்வி அடைந்தது. இது இவர் இவரை சார்ந்திருக்கும் அதிமுகவை மீட்டு விடுவார் என்று நம்பி இவர் கூட இருந்தவர்களுக்கு இவர் செய்த பச்சை துரோகம். ஆம், இன்றும் அதிமுக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு கிடைத்து வந்தது, அதற்கு அவர்களின் விசுவாசக்கு தான் என்று கொடுக்கப்பட்ட மரியாதை.  Currently People rejected TTV Dhinakaran & AMMK அது இவ்வாறு அந்த சமூக மக்களுக்கு எதிராக அதிமுகவை சித்தரிப்பதன் மூலம் வரும் காலங்களில் அவர்கள் திமுக பக்கம் சென்றால். அது வேறு ஒரு சமூகத்துக்கு கட்டாயம் அந்த தொகுதி சென்றால் உங்களின் பிடியில் இருந்த தொகுதி அந்த சமூகத்தை விட்டு சென்று. பின் நாட்களில் அவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போக கூடும். உதாரணம்: சோழிய வெள்ளாளர்கள், முன்பு இவர்கள் தான் 8-10 அமைச்சர்கள் இருந்தனர், தற்போது ஒன்று தான...

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எதிர்க்கட்சி தலைவராக முதல் செய்தியாளர் சந்திப்பில்

படம்
அதிமுகவை பொறுத்தவரை மக்கள்நலனே முக்கியமானது, 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள்& 14 நலவாரியங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு,அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசியப்பொருட்கள், உணவுத்தொகுப்பு மற்றும் ருபாய் 2000 நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும். எனது தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியதை போன்று ஏழைகள் , மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் , கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சமூக கூடங்கள் அமைத்து உணவு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தற்போதைய அரசு எடுத்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்திய அளவில் நோய் தொற்றில் தமிழகம் முதலிடம், உயர்பலிகள் அதிகமாவது மிகவும் வேதனையளிக்கின்றது.  கொரோனா தினசரி பாதிப்பு 35,000 ஆக அதிகரித்துள்ளது ...

என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 1)

படம்
TTV தினகரனை மிக பெரிய ஆளுமை என்று உசுப்பேத்தி வளர்த்தெடுத்த பெருமை முங்களப் பணியாளர்களை தான் சாரும். அதுவும் குறிப்பாக தராசு சியாம், லக்ஷ்மி, சபீர், லட்சுமணன் போன்ற தன்னை நடுநிலை என்று சொல்லி கொள்ளும் ஒரு சிலரின் சுய லாபத்துக்காக ஆசை வார்த்தை காட்டி திமுகவுடன் வாங்கி கொண்டோ வாங்காமலோ அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி அவரை 4% வாக்குகளும் குறைவாக வாங்க வைத்து இன்று அவரின் அரசியல் எதிர் காலம் வைகோவை விட கேவலமாக கொண்டு சென்ற பெருமை இவர்களை தான் சாரும். இவரோடு இருப்பவர்கள் கூடிய விரைவில் தாய் கழகமோ அல்லது திமுகவுக்கோ செல்ல தான் போகின்றனர் என்பது மட்டும் 100% நடக்கக் கூடியதே. TTV Dhinakaran spoiler of politics, not shrude politician தொடரும்...

இப்படி அப்பழுக்கற்ற தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக!!!

படம்

1% வாக்கு வச்சிகிட்டு நீ பண்ணுற அலப்பறை இருக்கே...

படம்
1% வாக்கு வச்சிகிட்டு நீ பண்ணுற அலப்பறை இருக்கே... விஜயகாந்த் என்ற மனிதனுக்கு மட்டுமே விழுந்த வாக்கு 10%... அவர் நேரடி தீவிர அரசியலில் இல்லாத நிலையில் 1% இருப்பதே அவர் மீது கொண்ட பற்றே ஒழிய வேறு எதுவும் இல்லை. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேர்தல் கூட்டணி பேசுவது, தேர்தல் பிரச்சாரம் செய்வது மட்டுமே அரசியல் என்று நினைத்து கொண்டு இருக்கிறார் போலும். 2011 ல் விஜயகாந்த் அவர்கள் நேரடி அரசியலில் இருந்த போது 41 என்றால், தற்போது உங்கள் தகுதி 4 தொகுதி தான். இதை தற்போது உணர்ந்து அதில் முழுவதும் வெற்றி பெற்று வரும் தேர்தலில் அந்த MLA க்களால் மேலும் கட்சியை வளர்த்தால் மட்டுமே அரசியலில் நீடிக்க முடியும்.  தற்போது நீங்கள் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளீர்கள் என்பது நீங்கள் அமமுக பக்கம் ஒரு கால் வைப்பது போல் இருக்கிறது. அது தான் உங்கள் நிலைபாடு என்றால் நீங்கள் அரசியல் படு குழியை நீங்களே நோண்டுகின்றீர் என்பது மட்டும் நிச்சயம் உணர்வீர் தேர்தல் முடிவுக்கு பின்னர்.  அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போல் இல்லை என்பது உண்மை.

தேர்தல் பிரச்சாரம்: கோவையை குலுங்க வைத்த எடப்பாடியார்

படம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், ஆளும் அதிமுக ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத மாபெரும் வளர்ச்சியை கண்டிருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். கோயம்புத்தூர் இராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர், ஆளும் அதிமுக அரசால், 10 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் வேலை கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். போத்தனூர் பகுதியில், அனைத்து இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடிய முதலமைச்சருக்கு, ஜமாத்தார் சார்பில், சமூக கல்வி பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. குல்லா அணிந்து இஸ்லாமியர்களின் ஆதரவை கோரிய முதலமைச்சர், ஹஜ் புனித யாத்திரைக்கான நிதியை மத்திய அரசு ரத்து செய்தபோது, தமிழக ஆளும் அதிமுக அரசு, தொடர்ந்து வழங்கி வருவதாக குறிப்பிட்டார். குனியமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், உள்ளாட்சித்துறையும், அதற்கான அமைச்சர் எஸ்.பி...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம்

படம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம்

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் : தொடர்பு எண்கள் | Thread

படம்
  தலைமை கழக அறிவிப்பு: செய்தி தொடர்பாளர்கள் நியமனம்: தேதி: ஜூன் மாதம் 29 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு (29.06.2019) 1.  திரு. C பொன்னையன், கழக அமைப்பு செயலாளர், தொடர்பு எண்: 9840046677, 26266111 2. திருமதி பா வளர்மதி, கழக இலக்கிய அணி செயலாளர், தலைவர் - தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், தொடர்பு எண்: 9444489003, 24742777, 24715050, 9382171701 3. முன்னாள் அமைச்சர் திருமதி கோகுல இந்திரா B.A.B.L., கழக அமைப்பு செயலாளர், 9444066188, 044-23614006, 045772266188 தலைமை கழக அறிவிப்பு: செய்தி தொடர்பாளர்கள் நியமனம்: தேதி: ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு (20.04.2020) 17. திரு. புகழேந்தி அவர்கள் நியமிக்கப்பட்டார். தலைமை கழக அறிவிப்பு: செய்தி தொடர்பாளர்கள் நியமனம்: தேதி: அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு (28.11.2020) 18. திருமிகு அப்சரா ரெட்டி அவர்கள் நியமிக்கப்பட்டார். தலைமை கழக அறிவிப்பு: செய்தி தொடர்பாளர்கள் நியமனம்: தேதி: ஜனவரி மாதம் 19 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு (19.01.2021) 19. திரு பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம்  அவர்க...

கழக செய்தி தொடர்பாளர் நியமனம்.

படம்
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. 

அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ; வெற்றி மட்டுமே இலக்கு’ ஓ பி எஸ் சூளுரை

படம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ‘ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பிள்ளையார் சுழி போடுவது அம்மா பேரவை தான். யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை. அதிமுகவுக்கு 30 ஆண்...

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா

படம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா: MGR ஏழையின் துயர் நீக்கிய வள்ளல் எம்.ஜி.ஆர் ஓர் சகாப்தம் MGR - The Legend MGR-Super Star ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்றவர் ஏழையின் வாழ்வில் ஒளி ஏற்றிய மகான் ஏழைகளின் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளில் தலைவர் அவர்களை வணங்கி 2021இல் நமது வெற்றி வேட்பாளர், விவசாயிகளின் காவலர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி தொடர தமிழ்நாட்டின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவோம் என்று சபதம் ஏற்போம். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்த்து: தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் தனது தனித்துவ முத்திரையைப் பதித்து யாராலும் மறக்க முடியாத சரித்திர சாதனைகள் படைத்த கழகத்தின் நிறுவனர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்கினார். ஏழை, எளிய மக்களுக்காக நல்ல பல திட்டங்கள் வகுத்து, மக்கள் நல...