நீங்கள் மாறுங்கள் இல்லை மாற்றப் படுவீர்கள்....

தற்போது இருக்கும் கொரோனா இரண்டாம் அலைக்கு அதிமுக அரசு முதல் அலையிலேயே முற்று புள்ளி வைக்காததே காரணம் என்கிறார் தற்போதைய கையாலாகாத முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள். 

அரசு கிராம சபை கூட்டம் வேண்டாம் என்ற போது. முடியாது நாங்கள் கூட்டியே தீருவோம் என்று அரசியல் செய்து விட்டு இன்று பழியை தூக்கி முந்தைய அரசின் மீது போடுவதா?. அதிமுக அரசு அனுமதி கொடுக்காத திமுக மாநாட்டை காபந்து அரசு ஆனவுடன் வேக வேகமாக கூட்டி பல லட்சம் தமிழ் மக்களை ஒன்று கூட்டி (காசுக்கு கூட்டம் கூட்டுவது தான் தமிழ்நாட்டின் வழக்கம், அது யாராக இருந்தாலும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்) கொரோனா பரவலை அதிகரித்த பெருமை திரு. அப்போதைய எதிரி கட்சி தலைவரை தான் சாரும். 

ஏன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் கூட்ட வில்லையா என கேட்கும் சில தற்குறிகளுக்கு ஒரு விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதி மக்கள் மட்டுமே ஒன்று கூடினர். ஆனால் ஸ்டாலின் ஒரே இடத்தில் 10 தொகுதி மக்களை ஒரே இடத்தில் கூட்டி பிரச்சாரம் செய்தார். மேலும் திருச்சியில் நடந்த அந்த மாநாட்டில் தமிழ் நாடு முழுவதும் திமுக கொத்தடிமை மாவட்டங்களுக்கு இவ்வளவு பேரை அழைத்து வர Assignment கொடுக்கப் பட்டது. இப்படி பொறுப்பின்றி நடந்து கொண்டுவிட்டு தற்போது நீலி கண்ணீர் வடிப்பது உங்களின் அரசு தோல்வியை ஒப்புக் கொள்வதற்கு சமம். 
Edappadi K Palanisami will replace Stalin
ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிச்சாமி


எப்போதும் தான் சொல்வதை தான் முதல்வர் செய்கிறார் என்று சொல்லி கொண்டு இருந்தீர்கள் தானே. ஏன் இதை பற்றி நீங்கள் முன்பு சொல்லவில்லை, இல்லை அப்படி சொன்னது தவறா??? இல்லை நீங்கள் பொய் சொன்னீர்களா???

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்?. எதிர் கட்சியாக இருந்த போது எப்போதும் அரசுக்கு எதிராக பேசுவது, தடுப்பூசிக்கு எதிராக சந்தேகங்களை எழுப்புவது, 1 கோடி கொடு 5000 கொடு என்று நச்சரிப்பது, சட்டமன்றத்தில் எப்போதும் வெளிநடப்பு என்று இருந்து விட்டு, இப்போது மத்திய அரசையும் முன்னாள் அரசையும் குறை கூறுவது. 

முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள். உங்கள் கட்சியில் வேறு ஒருவரை முதல்வர் ஆக்குங்கள், அதை விட்டு விட்டு அடுத்தவன் மீது பழி போட்டு விட்டு தப்பிவிடலாம் என்று என்ன வேண்டாம். இது 1996 றும் இல்லை 2006 றும் இல்லை 2021 சமூக ஊடகம் வளர்ந்துள்ள காலம். நீங்கள் மாறுங்கள் இல்லை மாற்றப் படுவீர்கள்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?