தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார், தலைவர்கள் இரங்கல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், சிறந்த பண்பாளருமான திரு.ஞானதேசிகன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திரு.ஞானதேசிகன் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். - கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸின் துணை தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் துயர செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்வதோடு குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். - கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். அரசின் சார்பிலும் அஇஅதிமுக சார்பிலும் திரு. மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. Mafoi பாண்டியராஜன் அஞ்சலி செலுத்தினர்.