இடுகைகள்

பிரேமலதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1% வாக்கு வச்சிகிட்டு நீ பண்ணுற அலப்பறை இருக்கே...

படம்
1% வாக்கு வச்சிகிட்டு நீ பண்ணுற அலப்பறை இருக்கே... விஜயகாந்த் என்ற மனிதனுக்கு மட்டுமே விழுந்த வாக்கு 10%... அவர் நேரடி தீவிர அரசியலில் இல்லாத நிலையில் 1% இருப்பதே அவர் மீது கொண்ட பற்றே ஒழிய வேறு எதுவும் இல்லை. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேர்தல் கூட்டணி பேசுவது, தேர்தல் பிரச்சாரம் செய்வது மட்டுமே அரசியல் என்று நினைத்து கொண்டு இருக்கிறார் போலும். 2011 ல் விஜயகாந்த் அவர்கள் நேரடி அரசியலில் இருந்த போது 41 என்றால், தற்போது உங்கள் தகுதி 4 தொகுதி தான். இதை தற்போது உணர்ந்து அதில் முழுவதும் வெற்றி பெற்று வரும் தேர்தலில் அந்த MLA க்களால் மேலும் கட்சியை வளர்த்தால் மட்டுமே அரசியலில் நீடிக்க முடியும்.  தற்போது நீங்கள் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளீர்கள் என்பது நீங்கள் அமமுக பக்கம் ஒரு கால் வைப்பது போல் இருக்கிறது. அது தான் உங்கள் நிலைபாடு என்றால் நீங்கள் அரசியல் படு குழியை நீங்களே நோண்டுகின்றீர் என்பது மட்டும் நிச்சயம் உணர்வீர் தேர்தல் முடிவுக்கு பின்னர்.  அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போல் இல்லை என்பது உண்மை.