இடுகைகள்

முதல்வர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்???

படம்
என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்??? ஸ்டாலின் பதவி ஏற்று இன்றோடு இருபது நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இவரின் செயல்கள்யாவும் முன்னரே ஒரு குழுவால் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பத்திரிக்கையாளர்கள் தன் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் நடத்தும் வேலையை மட்டுமே அதிகம் செய்து வருகிறார். ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே இதுவரை செய்ய வில்லை என்பதே உண்மை. இது எதிரி கட்சியாக இருக்கும் போது கைகொடுக்கும் ஆனால் இதையே நீங்கள் செய்து வந்தால் தமிழ் மக்கள் தங்கள் வேலையை காட்ட தொடங்குவார்கள் என்பது வரும் தேர்தல்கள் உங்களுக்கு உணர்த்தும். இதுவரை இவர் என்ன செய்து விட்டார் என்று ஆகா ஓகோ என்று ஊடகங்கள் ஊடகவியாளர்கள் சொல்லுகின்றனர் என்று பார்த்தால் ஓர் மிக பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஏன் என்றால் இவர் அடித்த சிக்சர்கள் ( இப்படியே அதிகமாக பத்திரிக்கை நண்பர்கள் அவரின் செயலுக்கு உவமை படுத்தி கூறுகின்றனர்) முன்பே அடித்த சிக்ஸர்கள், நடைமுறையில் இருக்கும் சிக்சர்கள், சாத்தியமில்லாத வெறும் காகித சிக்ஸர்கள், மத்திய அரசை வலியுறுத்தும் சிக்...

மூடிக்கிட்டு வேலைப்பாருங்க... உ.பி.க்களே...!

படம்
கருணாநிதிக்கு கூவத்தில் கூட இடம் தர மறுத்த எடப்பாடிக்கு, வீட்டையே ஒதுக்கியுள்ளது திமுக - உபி-க்கள்  பிதற்றல்... எதிர்கட்சி தலைவருக்கு கேபினட் அந்தஸ்த்து உண்டு. அரசு வீடும் உண்டு. இது நாள் வரை, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்கள் அம்மாவும் கருணாநிதியும் தான். இருவருமே சென்னையைச் சார்ந்தவர்கள் என்பதால், எதிர்க்கட்சி தலைவருக்கு பொதுவா ஒதுக்கப்படும் அரசு வீடு ஒதுக்கப்பட அவசியமில்லாமல் போனது.  ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சி தலைவர் சென்னையைச் சாராதவர் என்பதால், பொதுவாக ஒதுக்கப்படும் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்ளோ தான். மற்றபடி இதுல, கருணை மழை பொழிந்த திமுக, ஆறடி ஒதுக்காத எடப்பாடிக்கு வீட்டையே ஒதுக்கிய என, அது இதுன்னு உருட்ட இதில் ஒன்றுமேயில்லை.  கொஞ்சமேனும் அரசு நிர்வாகம் பற்றி புரிதலுடன் இருங்கள்.  ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டசபை பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை என்றால் MLA பதவி பறிபோகும் என்ற விதியை, என் அப்பா கருணாநிதி க்கு மட்டும் தளர்த்தி விலக்கு கொடுத்து, என் அப்பா இறக்கும் போது MLA வாகவாச்சும் இருக்க அனுமதிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அன்றைய அண்ணா திமுக ம...

மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ?

படம்
மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க தகுதி உடையவர் யார் என்று ? மண்ணில் நாற்று நட்டியவரா ? மண்டையில் மயிர் நட்டியவரா ? தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக வைத்துள்ளவரா ? அராஜக பூங்காவாக மாற்ற நினைப்பவரா ? (மக்களிடம் தவறான கருத்துகளை கூறி போராட்டக்களமாக மாற்றுதல் ) களத்தில் நின்று வென்றவரா? கணினி முன் அமர்ந்த்தவரா?? சுயதொழில் செய்பவரா ? ஊழலையே தொழிலாக கொண்டவரா ? விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அனைவரையும் மதிக்கும் பண்பு கொண்டவரா? பணக்கார குடும்பத்தில் பிறந்து ரவுடியாக வளர்ந்து தத்தியாக வளர்ந்த்தவரா?? ஏழைகளை காப்பவரா ? ஏழையை கண்டால் விரட்டுபவரா ? காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்து தீர்வு கண்டவரா? காவேரி பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் மட்டும் தேடியவரா ? எப்போதும் மக்களோடு மக்களாக இணைந்து எளிமையாக இருப்பவரா? சிகப்பு கம்பளம் விரித்து, கான்கிரீட் அமைத்து, செட் போட்டு மக்களை 10 அடி தூரத்தில் இருந்து சந்திக்கும் ஆடம்பரமாக இருப்பவரா??? மக்களுக்காக உழைப்பவரா ? ...

தேர்தல் பிரச்சாரம்: கோவையை குலுங்க வைத்த எடப்பாடியார்

படம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், ஆளும் அதிமுக ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத மாபெரும் வளர்ச்சியை கண்டிருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். கோயம்புத்தூர் இராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர், ஆளும் அதிமுக அரசால், 10 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் வேலை கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். போத்தனூர் பகுதியில், அனைத்து இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடிய முதலமைச்சருக்கு, ஜமாத்தார் சார்பில், சமூக கல்வி பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. குல்லா அணிந்து இஸ்லாமியர்களின் ஆதரவை கோரிய முதலமைச்சர், ஹஜ் புனித யாத்திரைக்கான நிதியை மத்திய அரசு ரத்து செய்தபோது, தமிழக ஆளும் அதிமுக அரசு, தொடர்ந்து வழங்கி வருவதாக குறிப்பிட்டார். குனியமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், உள்ளாட்சித்துறையும், அதற்கான அமைச்சர் எஸ்.பி...

இலங்கை கடற்படை தாக்குதலால் 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி

படம்
இலங்கை கடற்படை தாக்குதலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணை. இலங்கை கடற்படையின் இச்செயலை வன்மையாக கண்டித்து உத்தரவு.

முதல் பேட்ஸ்மேனாக களம் இறங்கி, ஆட்டமிழக்காமல் 234 ரன்களை முதல்வர் எடுப்பார் என நாகையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உரை

படம்
முதல் பேட்ஸ்மேனாக களம் இறங்கி, ஆட்டமிழக்காமல் 234 ரன்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என நாகையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உரை திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். மக்கள் இனி அதை நம்ப போவதில்லை. அதிமுகவினர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கிறார்கள். இன்னும் எஞ்சி இருக்கிற 40 நாட்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக இறங்குகிற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவுட் ஆகாத பேட்ஸ்மேனாக களத்திலிருந்து 234 ரன்களை அடித்த பெருமையை பெற்றவராக திகழ்வார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி வழங்கும் எடப்பாடி பழனிசாமியை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினரும், கூட்டணி கட்சியினரும் அமோகமாக வெற்றி பெறுவார்கள்.

மறைந்த ஞானதேசிகன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஆறுதல்

படம்
சென்னை, ஆழ்வார்பேட்டையில் அண்மையில் காலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, அன்னாரது குடும்பத்தினருக்கு திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆறுதல் கூறினார்.

முதல்வரின் டெல்லி பயணம்: அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியை சந்திக்கிறார்

படம்
டெல்லிக்கு விமானத்தில் முதல்வர் புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர். புதுடெல்லிக்கு வருகை தந்த முதல்வரை, டெல்லி விமான நிலையத்தில் புதுடெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி திரு.தளவாய் என்.சுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.K.P.முனுசாமி, திரு.A.நவநீதகிருஷ்ணன், திரு.ஏ.முகமது ஜான், திரு.N.சந்திரசேகரன் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். ஜனவரி மாதம் 18ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்று, அவரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு, சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது. தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் , தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜகவும் கூட்டணி மற்றும், தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பற்றியும் இருவரும் விவாதித்தனர். மேலும் ஜனவரி மாதம் 19ஆம் தேதி காலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தில் பல்வேறு திட்...

முதியோர் மற்றும் விதவைகள் மாத உதவித் தொகை ஆயிரத்திலிருந்து 1500 ரூபாயாக உயர்வு

படம்
முதியோர் மற்றும் விதவைகள் மாத உதவித் தொகை ஆயிரத்திலிருந்து 1500 ரூபாயாக உயர்வு. மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பு... வெற்றிநடை போடும் தமிழகம்  65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மட்டுமின்றி ஆதரவற்ற விவசாயக் கூலிகள், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற  & கணவனால் கைவிடப்பட்ட மனைவியர் ஆகியவர்களுக்கும் "தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்" பல்வேறு நிலைகளில் விரிவுபடுத்தப்பட்டு கழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவித்திட்டத்தின் படி வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000/-  தற்போது ₹1500 ஆக உயர்த்தி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவர் மக்களின் முதல்வர்.

மதுரையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர்

படம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஜனவரி 16, 2021 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களும் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் ஜனவரி 15 2021 அன்று  பாலமேடு அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுத்தொகையை வழங்கினர். மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் ஜனவரி 16 2021 அன்று மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்கள்.

தமிழகத்தின் துணை முதல்வரை வாழ்த்திய முதல்வர்

படம்
தமிழகத்தின் துணை முதல்வர், கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் பெற்று பூரண நலத்துடன் மகிழ்வுடன் வாழ  தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் தமிழக முதல்வரும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும் அண்ணன் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிச்சாமி.

தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் : முதல்வர்

படம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்; மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; நாட்டில் நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நம் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திடவும், உலக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவிடவும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் நல்வாழ்த்துகளை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.  கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். மேலும்., மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை, புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறையினரின் குடும்பங்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.