முதல்வரின் டெல்லி பயணம்: அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியை சந்திக்கிறார்
டெல்லிக்கு விமானத்தில் முதல்வர் புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோரும் சென்றனர்.
தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் , தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜகவும் கூட்டணி மற்றும், தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.
மேலும் ஜனவரி மாதம் 19ஆம் தேதி காலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக