இடுகைகள்

செய்தியாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கண்டனம்.

படம்
விழுப்புரம் - மேலமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைக்கச் சென்ற மாண்புமிகு அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், ஊக்கத்தொகை வேண்டி மனு அளிக்க வந்த செய்தியாளர்களை அவமதித்துள்ள செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். மழை,வெள்ளம்,பேரிடர்,பெருந்தொற்று என எக்காலத்திலும் இரவுபகல் பாராமல் தன்னலம் கருதாது செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியாற்றுகின்ற முன்களப் பணியாளர்களான "செய்தியாளர்களை உங்களால் தான் தொற்று பரவுகிறது" என்றுகூறி திரு.பொன்முடி அவர்கள் காயப்படுத்தி அவமதித்துள்ளார். மக்கள் பிரதிநிதியாக முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சபை நாகரிகம் அறிந்து, மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும். இனியேனும் மக்களிடம் இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொள்ளாதவாறு அனைவரையும் அறிவுறுத்தி வைக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். - திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர்.