சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்? லட்சுமணன், லட்சுமி, தராசு சியாம் போன்றோர் திமுகவின் கைப்பாவையாக இருந்து அதிமுகவை அழிக்க திட்டமிட்டு ஊடகங்களில் உருவாக்கிய பிம்பம் தான் "சசிகலா". ஆனால் உண்மையில் சசிகலாவை பெரிதும் யாரும் ரசிக்கவில்லை, அமமுக தொண்டர்கள் மற்றும் இவரின் சமுதாயத்தினர் சிலர் நீங்கலாக. இவரின் சமுதாயத்தினர் இவர் மீது ஒரு மரியாதை கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அதை அவர் காப்பாற்றும் அளவுக்கு நடந்து கொள்கிறாரா என்றால், இல்லை என்பதே உண்மை. அரசியல் என்பது செஸ் விளையாட்டை போன்றது, ஒரு move தவறாக அல்லது அவசரப்பட்டு வைத்து விட்டால் காலியாகி போவோம். சசிகலா ஒரு move இல்லை பல move களை தவறாக வைத்து விட்டார். முதலில் இவர் முதல்வர் ஆக ஆசைப்பட்டது முதல், நம் ஓ பன்னீர்செல்வம் அவர்களை முதல்வர் பதவியை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது, நம் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை முதல்வர் ஆக்கியது, அமமுக என்னும் கட்சியை விமர்சனம் செய்யாதது வரை அனைத்துமே இவர் செய்த தவறான move தான். கடைசியாக தேர்தலுக்கு முன் ஓய்வு அறிவிப்பு தொடர்ந்து தேர்தலுக்கு பின் அரசியல் பிரவேசம் என்பது எல்லாமே இ...