அதிமுக பொதுக்குழு 16 தீர்மானங்கள்
1. கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்,
2. கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்,
3. முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றம்,
4. ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்,
5. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூ.2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கும் அரசுக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,
6. டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு,
7. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு,
8. தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்,
9. அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவித்து தீர்மானம்,

10. 7.5% இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வழங்கி, படிப்புக்கான செலவை ஏற்ற தமிழக அரசுக்கு பாராட்டு,
11. நகர்புற வீட்டு வசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த பிரதமருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,
12. நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு,
13. இலங்கையில் மகாண சபைகள் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்,
14. தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம் - தீர்மானம்
16. முதல்வர் பழனிசாமியை விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது கட்சியினருக்கு அதிமுக பொதுக்குழு கண்டனம்,
கருத்துகள்
கருத்துரையிடுக