நாம் ஏன் மீண்டும் எடப்பாடியார் வேண்டும் என்கிறோம்...

1. நல்ல நிர்வாக திறன் கொண்ட மனிதர் , இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொரோனா என்னும் கொடிய நோயை எதிர் கொண்ட விதம். மேலும் பேரிடர் மேலாண்மையில் இவர் கில்லி. முதலில் இவர் நம் கொடை. இப்பண்பு ஓ பி எஸ் அவர்களிடமும் இருப்பது என்பது அதிமுக விற்கு கூடுதல் பலம். உலக வல்லரசு நாடுகளே தோற்று போன இந்த கொரோனாவை தமிழக முதல்வர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது ஆனால் அதன் மூலம் வரும் இடர்களை தடுக்கலாம் என இந்த உலகுக்கு உணர்த்திய முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள். 2. நமது அம்மா மீது தொடர்ந்து திமுகவால் அவதூறாக கூறப்பட்ட சில விசயங்கள் எடப்பாடி மற்றும் ஓ பி எஸ் அவர்களிடம் கூற முடியாது. ஏனெனில் அவரை எளிதில் அணுக முடியாதவர் என்ற விமர்சனம் தொடர்ந்து திமுகவினால் வைக்கப்பட்டது. தற்போது அதை திமுகவினரால் கூற முடியாத அளவுக்கு எளிதில் அணுக கூடிய முதல்வராக திகழ்கிறார். எளிதில் அணுக கூடிய எளிய முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள். 3. மொத்தம் இதுவரை சுமார் 1 லட்சம் தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்த மனுக்கள், கோப்புகள் மற்றும் திட்ட அனுமதிகளை சாத்தி...