நாம் ஏன் மீண்டும் எடப்பாடியார் வேண்டும் என்கிறோம்...

1. நல்ல நிர்வாக திறன் கொண்ட மனிதர் , இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொரோனா என்னும் கொடிய நோயை எதிர் கொண்ட விதம். மேலும் பேரிடர் மேலாண்மையில் இவர் கில்லி. முதலில் இவர் நம் கொடை. இப்பண்பு ஓ பி எஸ் அவர்களிடமும் இருப்பது என்பது அதிமுக விற்கு கூடுதல் பலம். உலக வல்லரசு நாடுகளே தோற்று போன இந்த கொரோனாவை தமிழக முதல்வர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது ஆனால் அதன் மூலம் வரும் இடர்களை தடுக்கலாம் என இந்த உலகுக்கு உணர்த்திய முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள்.

2. நமது அம்மா மீது தொடர்ந்து திமுகவால் அவதூறாக கூறப்பட்ட சில விசயங்கள் எடப்பாடி மற்றும் ஓ பி எஸ் அவர்களிடம் கூற முடியாது. ஏனெனில் அவரை எளிதில் அணுக முடியாதவர் என்ற விமர்சனம் தொடர்ந்து திமுகவினால் வைக்கப்பட்டது. தற்போது அதை திமுகவினரால் கூற முடியாத அளவுக்கு எளிதில் அணுக கூடிய முதல்வராக திகழ்கிறார். எளிதில் அணுக கூடிய எளிய முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள்.
3. மொத்தம் இதுவரை சுமார் 1 லட்சம் தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்த மனுக்கள், கோப்புகள் மற்றும் திட்ட அனுமதிகளை சாத்திய கூறுகளை ஆராய்ந்து 70-80% பணிகளை முடித்தும், 10-20% பணிகள் நடைபெற்றும் வருகிறது, மேலும் சில பணிகளை நிரந்தரமாக நீக்கியும் வைத்துள்ளார். இது முதல்வரின் கடமை தான், ஆனால் அதை 24x7 முழு அற்பணிப்புடன் வேலை செய்தால் மட்டுமே செய்ய முடியும் என்பது அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு நன்கு புரியும். இதை அமைதியாய், விமர்சனங்கள் எத்தனை எத்தனை அவைகளை கடந்து, எதிர் கட்சிகள் மன்னிக்கவும் எதிரி கட்சிகள் போடும் தில்லாலங்கடி வேலைகள் சமாளித்து, கட்சிக்குள்ளேயே இருக்கும் தீய சதிகளை சமாளித்து, மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்தை மட்டுப்படுத்தி - சமாதானப் படுத்தி, மேலும் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என்று குடைச்சல் கொடுக்கும் டிராபிக் ராமசாமி போன்ற திமுக சொம்புகளை சமாளித்து இதை சாத்திய படுத்தியது எவ்வளவு கடினம் என்பது இதை படிக்கவே எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை யோசித்தால் புரியும். இவ்வாறு செயல்படும் முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள்.
4. மூன்று மாதம் தாங்காது என்று சொன்ன நடுநிலை திமுக சொம்புக்கள் மத்தியில் நான்கு ஆண்டுகள் இந்த ஆட்சியை செம்மையாக நடத்தி மீண்டும் போட்டிக்கு தன்னை தயார் செய்து வந்து நிற்கும் ஒரு தகுதி போதும் மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வேண்டும் என்பதற்கு.
5. ஒரு முதல்வர் இவ்வளவு இன்னல்களை சந்தித்தது உண்டா??? என்ற கேள்விக்கு தற்போதைக்கு பதில் இல்லை. கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது, 2 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது, 18 MLA க்கள் தகுதி நீக்கம், தொடர் தீய சக்திகளால் ஏவி விடப்பட்ட போராட்டங்கள், நடுநிலை என்று சொல்லி கொண்டு திமுக சொம்பாக இருந்து போட்ட நீதி மன்ற வழக்குகள், வாழ்வா சாவா இடை தேர்தல், போதாத குறைக்கு மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம், உட்கட்சி பிரச்சனை, மேலும் செய்தி ஊடகங்களின் (TRPக்கு, தன் கட்சி விசுவாசத்திற்கு, MP சீட் க்கு) நெறி பிரளல், இவை அனைத்தையும் தாண்டி ஒருவர் சாதிக்கிறார் என்றால் அவர் தான் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள்.
6. தான் ஒரு செயலை செய்யும் போது தவறு என்று உணர்ந்தால் அதை திருத்தி கொள்வது என்பது எவ்வளவு பெரிய விசயம் என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் தெரியும். இத்தகைய பண்பு ஒரு அரசுக்கு இருந்தால், நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தானே இப்படிப்பட்ட ஒரு அரசு கிடைக்க. ஆம் நம் முதல்வர் சில நேரங்களில் சில தவறான முடிவுகளை எடுத்திருந்தாலும் அதை ஈகோ பார்க்காமல் திரும்பப் பெற்று கொண்ட வரலாறு படைத்த எளிய முதல்வர். 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு விசயத்தில் தன் நிலையை விட பொது மக்களின் நிலையே தன் நிலை என மாற்றி கொண்ட மக்களின் முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள்.
7. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதை போல். புயல் வரும் பின்னே எடப்பாடி அரசு களத்துக்கு வரும் முன்னே என்பதை போல் சாத்திய படுத்தினார். கஜா, நிறவி என எத்தனை புயல் வந்தாலும் முதல்வரின் சீரிய நடவடிக்கைகள் மூலம் அதனை எதிர் கொண்டு வெற்றி கண்ட முதல்வர் மீண்டும் வேண்டும் என்று சொல்வோம் வாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics