உஷா மரணம் காட்டுமிராண்டி தனமான காவலர் செயல்....
ஊடகத்திற்கு இன்று ரஜினியோ கமலோ கட்சி ஆரம்பிக்கவில்லை... உஷா மரணத்தை எடுத்துக்கொண்டது... ஒரு போலீசை தண்டித்தால் இது தீர்ந்து விடுமோ... என்ன செய்ய வேண்டும் என்று எதிர் கட்சி கூறியதா? ஆக்க பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட கருத்துக்கள் பரிமாறப்படுகின்றனவா? அவனை 302 பிரிவில் தண்டித்தால் மட்டும் தீர்வு கிட்டுமோ? என் இது நடந்தது? தலைக்கவசம் அணியாமல் சென்ற ஒருவனை பிடிக்க சென்ற போது நிறுத்தாத வண்டியை உதைத்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு... ஒரு கர்ப்பிணி பெண் இறப்பு ஈடுசெய்ய முடியாததே... அதிலும் அந்த அதிகாரியின் செயலும் காட்டுமிராண்டி தனமானதே ஆனால் இன்று ஒரு தனிமனிதனுக்கு நடந்த ஒன்று நாளை நமக்கும் நடக்கலாம்... அப்ப இதற்கு தீர்வு வேண்டுமா இல்லை அந்த தனிமனிதனுக்கு தண்டனை வேண்டுமா?... நிரந்தர தீர்வை நோக்கி செல்ல கற்றுக்கொள்வோம் விவாவத்தை வைப்போம் ஆரோக்கியமான முறையில்... அரசின் செவி நோக்கி நம் பயணம் தொடரட்டும்.. #ADMK4ever