Achievements of Puratchi Thalaimagan

 

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சாதனைகள்...


‌1. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% இடஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று 19 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு செய்து. அதை நடைமுறை படுத்தியது.

‌2. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் அம்மா தலைமையிலான அதிமுக அரசு வழக்கு தொடுத்து நடத்தி வந்தார். அம்மாவிற்கு பிறகு எடப்பாடியார் அதை தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டார். பின் மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து "காவேரி மேலாண்மை ஆணையம்" அமைக்க வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

‌3. மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்து டெல்டா மாவட்டங்களை சுடுகாடு ஆக்க நினைத்த திமுக, பின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடிய ஸ்டாலினுக்கு சரியான அடி கொடுத்தார் எடப்பாடியார். ஆம் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதை அரசிதழில் வெளியிட்டு விவசாயத்தை நாசம் ஆக்கும் திட்டங்கள் இனி கொண்டுவர முடியாத வண்ணம் அரசாணை வெளியீடு செய்து சட்டமாக்கினார். 

‌4. இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் பிரபலம் ஆகி, அது கொடிய நோய் போன்று மாறி உயிர்களையும் உடமைகளையும் எடுக்க ஆரம்பித்த பிறகு. பொது மக்களின் நன்மைக்காக அந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தமிழ்நாட்டில் தடை செய்து உத்தரவிட்டு, அதை அரசாணை வெளியீடு செய்து சட்டமாக்கினார்.

‌5. உலக நாடுகளே தோற்று போன கொரோனா கொடும் நோயை மிகச் சிறப்பாக கையாண்டு, தமிழ் மக்களின் இதயங்களில் குடி புகுந்தார். மேலும் கொரோனா தடுப்பு மருந்து வந்தவுடன் அனைவருக்கும் விலையின்றி வழங்கப்படும் என உறுதியும் அளித்துள்ளார்.

‌6. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலம் பட்டியலில் தமிழ்நாடு அரசு முதல் இடத்தை தொடர்ந்து 3 வருடங்களாக மத்திய அரசிடம் பெற்று வருகிறது. இது தொடர் முயற்சியால் கிடைத்த மாபெரும் சாதனை.

‌7. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்: 380 கோடி செலவில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டி அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்டு, எடப்பாடியார் அரசால் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. 

‌8. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்வழி படித்த மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து, அதை ஆளுநர் ஒப்புதல் பெற்று சட்டமாக்கினார்.

‌9. இந்திய வரலாற்றில் யாரும் செய்ய முடியாத அளவுக்கு ஒரே 5 ஆண்டு ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து மகத்தான சாதனை படைத்தார்.

‌10. தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பட்டியலின உட்பிரிவுகளுக்கு தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப்பெயர் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என எடப்பாடியார் உறுதியளித்துள்ளார்.

‌11. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய நெகிழிகளுக்கு பயன்படுத்த, தயாரிக்க & சேமிக்க தடை செய்யப்பட்டு அதை நடைமுறை படுத்திய அரசு.

‌12. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; வேலுார் மாவட்டத்தை பிரித்து திருப்பத்துார் ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டங்களை பிரித்து அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த மகத்தான அரசு.

‌13. இரண்டாயிரம் மினி கிளினிக் தமிழகத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்படும் என்று அறிவித்து, முதல் கட்டமாக 630 மினி கிளினிக் திறந்து வைத்தார் எடப்பாடியார். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என பணி அமர்த்தி மகத்தான முத்தான திட்டம் கொண்டுவந்து 3 கிலோ மீட்டருக்கு ஒரு மருத்துவமனை என்பதை எட்ட இது வழிவகுக்கும்.

‌உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்து. அதை நடைமுறை படுத்திய அரசு அம்மாவின் அரசு. 

‌14. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைத்து முல்லைப்பெரியாறின் நீர்மட்டத்தை உயர்த்திய மாண்புமிகு அம்மாவின் அரசு, 20 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணைக்கு கேரள அரசிடமிருந்து மீண்டும் மின்சாரத்தை பெற்றுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?