Election 2019 Tamilnadu
என் பார்வையில்.... வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-5% வாக்கு வாங்கும் என தோன்றுகின்றது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் இது அவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் தான். தேர்தல் 2019ல் நாடாளுமன்ற, சட்டமன்ற அதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது நடக்கும் ஆட்சி 2019 வரை நீடிக்கும் என்றே கருதுகிறேன். ஆனால் இந்த ஆட்சி மீண்டும் வருமா என்பதை இனி வரும் காலங்களில் இவர்களின் செயல்பாடு மட்டுமே நடத்த கசப்புகளை மறக்க செய்தால் பார்க்கலாம். ஊடகம் எந்த பக்கம் இருக்கும் என்பதை பொருத்தும் 5-10 % வெற்றி அமையும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதுவரை திமுக கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். மேலும் இரண்டாம் இடம் எப்போதும் போல் அஇஅதிமுக வரவே வாய்ப்புள்ளது. மூன்றாவது இடத்திற்கு கடும் போட்டி இருக்கும் என்றே தோன்றுகிறது. டெல்டா பகுதியில் நல்ல பலம் உண்டு என்று சொல்லும் அளவுக்கு அமமுக வர வாய்ப்புள்ளது, ஆனால் வெற்றி பெருவார்களா என்பதை காத்திருந்தே பார்க்க முடியும். நடிகர்களின் புது கட்சிகளும் எங்கு இ...