யார் அடிமைகள்?
நீ ஆயிரம் குறைகள் எங்கள் அரசு மீது சொல்லலாம்...
ஆனால் ஒரு சாமானியரை இன்று ஆட்சியிலும் ஒருவரை இன்று கட்சிலும் வைத்து அழகு பார்க்கும் ஒரே இயக்கம் அஇஅதிமுக...
நாங்கள் அடிமைகள் என்று சொல்லும் எம் சமூக வலைத்தளவாசிகளே, இன்று வரை காங்கிரஸிற்கு நேரு குடும்பத்தில் இருந்து மட்டுமே தலைவர்கள் உருவாகின்றனரே - கிட்டத்தட்ட சுதந்திர இந்தியாவில் இவர்கள் விடுதலை பெற்றும் ஒரு குடும்பத்திற்கு அடிமையாகவே வாழ்கின்றனரே!
தமிழத்தில் திமுக என்னும் கட்சியில் மற்றும் ஆட்சியில் திரு.கருணாநிதி குடும்பம் மட்டுமே முக்கிய பொறுப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் இத்தருணத்தில் இவர்களை எதிர்க்க இந்த அடிமை கூட்டத்தில் ஒரு உண்மையான தகுதியான பெண்ணோ ஆணோ இல்லாத போது எங்களை அடிமை என்று கூற நா கூசாவில்லையோ!
இங்கு வாய் கிழிய கத்தும் இதுவரை ஆட்சி செய்யாதவர்களை பற்றி கவலைப்பட போவதில்லை. ஏன் எதற்கெடுத்தாலும் திமுகவை விமர்சிக்கின்றீர்கள் என்பதற்கு இதுவே பதில். எப்படி நிறை தளும்பாதோ அதேபோல் ஒன்னும் உள்ள இல்லேனாலும் தளும்பாது...
இப்போது தமிழ் தேசியம் பேசி ஊழல் ஒழித்து system repair செய்து விசில் அடிச்சி அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் ஏதாவது ஒரு சிறு நிர்வாக பொறுப்பில் இருந்தாவது இவர்கள் கூறியதை நிகழ்த்தினார்களா!. தன் துறையில் இருக்கும் அவலத்தை கூட சரி செய்ய முடியாத இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இந்த ஆட்சி பற்றி குறை கூற????
என்னை பொறுத்த மட்டில் உண்மை தமிழ் தேசியம் பேச தகுதி கொண்ட மனிதன் மாதத்தின் பெயர் கொண்ட இயக்கதிற்கே இருக்கிறது என்பது என் கருத்து. ஆனால் தேர்தல் அரசியல் பேச தொடங்கினால் இவரும் அவர்களின் வரிசையில் போய் அமரவேண்டியதே...
#ADMK4ever
கருத்துகள்
கருத்துரையிடுக