இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....
தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே.... உங்களை வைத்து அரசியல் பிழைப்பு மட்டுமே நடத்தும் திருமா போன்றோரை விட்டு விலகிச் செல்லுங்கள். அவர் அதிமுக ஆட்சியில் உங்களுக்கு எது என்றாலும் குரல் கொடுத்தார் என்று நினைத்து அவரை பின்தொடர்ந்து இருந்தால் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். தற்போது வரை நம் சகோ விக்னேஷ் இறப்புக்கு அவர் உரிய குரல் கொடுக்கவில்லை, தனக்கு பதவி போதும் என்ற எண்ணத்தில் திமுகவை பகைத்துக் கொள்ள மறுக்கிறார் என்றே பொருள். இவரை நம்பி அதிமுக போன்ற பொது கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் யாராக இருந்தாலும் இதை ஒருமுறை சிந்திக்க வேண்டும். சாதிய அடையாளத்தோடு மீண்டும் சனாதனம் மேலோங்க இவரை (திருமா) போன்றோர் மறைமுகமாக அதையே எதிர்க்கிறோம் என்ற போர்வையில் தன் வயிறு வளர்க்க இப்படி செய்வது காலப் போக்கில் உங்களுக்கும் தெரியவரும்.
சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?
சசிகலா, இனி என்ன செய்ய முடியும்? லட்சுமணன், லட்சுமி, தராசு சியாம் போன்றோர் திமுகவின் கைப்பாவையாக இருந்து அதிமுகவை அழிக்க திட்டமிட்டு ஊடகங்களில் உருவாக்கிய பிம்பம் தான் "சசிகலா". ஆனால் உண்மையில் சசிகலாவை பெரிதும் யாரும் ரசிக்கவில்லை, அமமுக தொண்டர்கள் மற்றும் இவரின் சமுதாயத்தினர் சிலர் நீங்கலாக. இவரின் சமுதாயத்தினர் இவர் மீது ஒரு மரியாதை கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அதை அவர் காப்பாற்றும் அளவுக்கு நடந்து கொள்கிறாரா என்றால், இல்லை என்பதே உண்மை. அரசியல் என்பது செஸ் விளையாட்டை போன்றது, ஒரு move தவறாக அல்லது அவசரப்பட்டு வைத்து விட்டால் காலியாகி போவோம். சசிகலா ஒரு move இல்லை பல move களை தவறாக வைத்து விட்டார். முதலில் இவர் முதல்வர் ஆக ஆசைப்பட்டது முதல், நம் ஓ பன்னீர்செல்வம் அவர்களை முதல்வர் பதவியை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது, நம் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை முதல்வர் ஆக்கியது, அமமுக என்னும் கட்சியை விமர்சனம் செய்யாதது வரை அனைத்துமே இவர் செய்த தவறான move தான். கடைசியாக தேர்தலுக்கு முன் ஓய்வு அறிவிப்பு தொடர்ந்து தேர்தலுக்கு பின் அரசியல் பிரவேசம் என்பது எல்லாமே இ...
கருத்துகள்
கருத்துரையிடுக