பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா:

MGR ஏழையின் துயர் நீக்கிய வள்ளல்
எம்.ஜி.ஆர் ஓர் சகாப்தம்
MGR - The Legend
MGR-Super Star
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்றவர்
ஏழையின் வாழ்வில் ஒளி ஏற்றிய மகான்
ஏழைகளின் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளில் தலைவர் அவர்களை வணங்கி 2021இல் நமது வெற்றி வேட்பாளர், விவசாயிகளின் காவலர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி தொடர தமிழ்நாட்டின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவோம் என்று சபதம் ஏற்போம்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாழ்த்து:
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் தனது தனித்துவ முத்திரையைப் பதித்து யாராலும் மறக்க முடியாத சரித்திர சாதனைகள் படைத்த கழகத்தின் நிறுவனர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்கினார். ஏழை, எளிய மக்களுக்காக நல்ல பல திட்டங்கள் வகுத்து, மக்கள் நலனுக்காகவே உழைத்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்ததினத்தையொட்டி முகாம் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்த்து:
கழக நிறுவனத்தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தவருமான நமது மக்கள்திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில், பொன்மனச்செம்மல் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை போற்றி வணங்குகினார்.
எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்த நாளையொட்டி தலைமை செயலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர், கழக துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு  தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி  சிறப்பித்தனர் மேலும் MGR மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் MGR அவர்களது 104வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் MGR மருத்துவ பல்கலைக்கழக வளாகத்திலுள்ள புரட்சித்தலைவர் MGR அவர்களது திருவருவச் சிலை, திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி நமது அம்மா நாளிதழ் வாயிலாக திரு. மருது ஆழகுராஜ் சித்திரகுப்தன் என்னும் அடைமொழி வாயிலாக " தலைவன் மீது சத்தியம்" என்ற தலைப்பில் கொடுத்த கவிதை மழை.
பிரதமர் திரு. நரந்திரமோடி வாழ்த்து:
பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும் அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?