என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்???

என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்???

ஸ்டாலின் பதவி ஏற்று இன்றோடு இருபது நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இவரின் செயல்கள்யாவும் முன்னரே ஒரு குழுவால் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பத்திரிக்கையாளர்கள் தன் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் நடத்தும் வேலையை மட்டுமே அதிகம் செய்து வருகிறார். ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே இதுவரை செய்ய வில்லை என்பதே உண்மை. இது எதிரி கட்சியாக இருக்கும் போது கைகொடுக்கும் ஆனால் இதையே நீங்கள் செய்து வந்தால் தமிழ் மக்கள் தங்கள் வேலையை காட்ட தொடங்குவார்கள் என்பது வரும் தேர்தல்கள் உங்களுக்கு உணர்த்தும்.

இதுவரை இவர் என்ன செய்து விட்டார் என்று ஆகா ஓகோ என்று ஊடகங்கள் ஊடகவியாளர்கள் சொல்லுகின்றனர் என்று பார்த்தால் ஓர் மிக பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஏன் என்றால் இவர் அடித்த சிக்சர்கள்( இப்படியே அதிகமாக பத்திரிக்கை நண்பர்கள் அவரின் செயலுக்கு உவமை படுத்தி கூறுகின்றனர்) முன்பே அடித்த சிக்ஸர்கள், நடைமுறையில் இருக்கும் சிக்சர்கள், சாத்தியமில்லாத வெறும் காகித சிக்ஸர்கள், மத்திய அரசை வலியுறுத்தும் சிக்ஸர்கள், மேலும் சில சிக்ஸர்கள் காலனாவுக்கு புரோஜனம் இல்லாதவைகள்.

சிக்ஸர்கள் ஒரு புறம் இருக்க, இவர் செய்த ஒன்று கூட பலன் அளிக்க வில்லை என்பது கண்கூடாக தெரிந்தாலும் அதை ஒரு செய்தியாக கடந்து செல்கிறது ஊடகம். அப்படி என்ன சொதப்பியது இந்த 20 நாட்களில் என்றால். இவரின் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் என்று சொல்லியே 14 நாட்களை வீணாக்கி கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மேலும் தளர்வுகள் இல்லா ஊரங்கு தான் தீர்வு என்று சொல்லி ஒரு நாள் கொரோனோவுக்கு விடுமுறை விட்ட ஒரே ஆட்சியாளர் நம் கையாலாகாத முதல்வர் தான். இது கொரோனோவை அதிகரிக்குமா என்பதை தாண்டி அத்தியாவசிய பொருட்களின் விலை 5 முதல் 10 மடங்கு வரை விலை ஏறியதை நினைக்கும் போது மோடி அறிவித்த பணமதிபிழப்பு நியாபகம் வந்து போனது 2 நாட்கள். 

கொரோனா உச்சத்தில் இருந்த போது கூட தினசரி பாதிப்பு 6000 என்ற எண்ணிக்கையை தாண்டாத நிலையை வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வைத்திருந்த நிலையை மாற்றி, கொரோனா இந்தியாவிலேயே 35000 த்தை கடந்து முதல் இடம் என்ற மிக பெரிய வேதனையான இக்கட்டான நிலைக்கு தள்ளிய கையாலாகாத முதல்வர் சொல்லும் காரணம் தான் கொடுமை. இதற்கு முன்னால் அரசு முதல் அலையிலேயே கொரோனாவுக்கு முற்று புள்ளி வைக்காதது தான் என்று பல்டி அடித்தது தான் இவர் அடித்த உண்மையான சிக்ஸர். 

இறப்பு விகிதம் 1.5% சதவீதமாக வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நிலையை மாற்றி கொரோனா உயிரிழப்பு நாள் ஒன்றுக்கு 450+ என்று மாற்றியது தான் இவர் அடித்த ஊடகங்கள் சொல்லாத இரண்டாவது சிக்ஸர்.

நடிகர் சத்யராஜ் மற்றும் மரியாதைக்கு உரியவர் இயக்குனர் நடிகர் மணிவண்ணன் நடித்த படமான அமைதி படை என்னும் படத்தில் ஒரு விசயத்தை மறைக்க இன்னொரு பெரிய விசயத்தை தூண்டி விட வேண்டும் என்பார். அதை போன்று கொரோனா உச்சத்தில் இருக்கும் சமயத்தில் எப்போதோ நடந்த பாலியல் புகாரை தற்போது வெளிக்கொண்டு வந்து அதை ஊடங்கங்கள் அனுதினமும் பேச வைத்து கொரோனா மரணங்களை மறைத்து வருகிறது இந்த கையாலாகாத அரசு. பாலியல் குற்றம் தண்டிக்க பட வேண்டிய நச்சு கிருமி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உயிரை கையில் பிடித்து கொண்டு மக்கள் அல்லாடும் இந்த சூழலில் இது கொஞ்சம் தேவையில்லாத ஆணியே. தற்போதும் வைரமுத்து மீது வைத்த புகார்கள் நிலுவையில் தான் உள்ளன, ஏன் அவரை விசாரணை வலயத்துக்குள் எப்போது கொண்டு வரும் இந்த சிக்ஸர் அடிக்கும் அரசு. இதைப்போன்ற நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனால் இந்த ஊடகம் அதை எல்லாம் பேசாது. எப்போது இவர்களின் உரிமையாளரை பாதுகாக்க வேண்டுமோ அப்போது மட்டும் இதை போன்ற செய்திகளை பூதாகாரமாக பேசும். இன்னும் சில நாட்களில் இதை மறந்து விட்டு அல்லது எது நடக்க வேண்டுமோ அது நடத்த பிறகு இந்த செய்தியை மூளையில் கூட பிரசுரிக்காது. இவ்வளவு தான் இவர்களின் ஊடக நெறி, கேட்டால் கொய்யா மூய்யா என்று கத்துவார்கள். என்னமோ இவர்கள் மட்டும் தான் நல்லவர்கள் என்று.

கருத்துகள்

  1. மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான
    நிலையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்து கொண்டு இருக்கும் போது ஊடகங்கள் உன்மை செய்திகள் வெளிபடுத்துமா மக்களை திசை திருப்பும்
    வேலைதான் செய்கிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?