தேர்தல் பிரச்சாரம்: கோவையை குலுங்க வைத்த எடப்பாடியார்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், ஆளும் அதிமுக ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத மாபெரும் வளர்ச்சியை கண்டிருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். கோயம்புத்தூர் இராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர், ஆளும் அதிமுக அரசால், 10 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் வேலை கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
போத்தனூர் பகுதியில், அனைத்து இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடிய முதலமைச்சருக்கு, ஜமாத்தார் சார்பில், சமூக கல்வி பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.
குல்லா அணிந்து இஸ்லாமியர்களின் ஆதரவை கோரிய முதலமைச்சர், ஹஜ் புனித யாத்திரைக்கான நிதியை மத்திய அரசு ரத்து செய்தபோது, தமிழக ஆளும் அதிமுக அரசு, தொடர்ந்து வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
குனியமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், உள்ளாட்சித்துறையும், அதற்கான அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் மிகச்சிறப்பாக செயல்படுவதால் தான், தேசிய அளவிலான விருதுகளை வாரி குவிப்பதாக, முதலமைச்சர் குறிப்பிட்டார்.
பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், ஆனைமலை - நல்லாறு திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றார். பொள்ளாச்சி புனிதமான மண் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, அதற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக சாடினார்.
ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் திருக்கோவிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாமி தரிசனம் செய்தார்.
வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை பகுதியில் அதிகளவில் நெல் சாகுபடி நடைபெறுவதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் அமைத்து தந்திருப்பதாக, முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள இராஜ வீதியில், காலை 8 மணிக்கு தனது பரப்பரையைத் தொடங்கிய முதலமைச்சர், குனியமுத்தூர், சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட், கிணத்துக்கடவு, கந்தமஹால், பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, சூலூர், கொடிசியா உள்ளிட்ட பகுதிகளில், இரவு 10 மணி வரை, உணவு இடைவேளைத் தவிர, ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
கருத்துகள்
கருத்துரையிடுக