திமுக கடைசியாக மூக்குடைப்பட்டது ரோசய்யாவிடம்தான்
மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நடந்துகொண்டிருந்த காலகட்டம் (2011)
தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கட்சியாக படுதோல்வியடைந்திருந்தது.
ஆளும் அதிமுக அரசிற்கு குடைச்சல் கொடுக்க கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. ( 2011 ஆகஸ்ட்)
தமிழ்நாட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிமுக அரசுடன் இணைந்து இனக்கமாக செயல்பட தொடங்கினார் ரோசய்யா.
இந்த எதிர்பாராத டுவிஸ்ட்டை கருணாநிதியே எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
தற்போது ஆளுநர் ரவிக்கு எதிராக ஸ்டாலின் ஆள் வைத்து முரசொலியில் எழுதிவரும் 'கொக்கென கோண வாயா, நக்கென நாராவாயா' பாணியில் கருணாநிதி தனக்குத்தானே கேள்வி பதில் என்ற பெயரில் முரசொலியில் ரோசய்யாவை கழுவி ஊற்றினார்.
ரோசய்யாவை திரும்பப் பெறக்கோரி சோனியாவிற்கு தொடர்ச்சியாக கடிதங்களாக எழுதித்தள்ளினார். அப்போது 2G உரசல்கள் திமுக காங்கிரஸ் இடையே விஸ்வரூபம் எடுத்திருந்த காலகட்டம் என்பதால் சோனியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
கடைசிவரை ரோசய்யாவை கரித்துக்கொட்டிக் கொண்டிருந்தார். அதிமுக ஆட்சியில் அமைதியாக தன் பணியை செய்துவிட்டு ஐந்தாண்டுகளை நல்லமுறையில் முடித்துவிட்டு சென்றார் ரோசய்யா.
ஆளுநரை வைத்து அரசியல் செய்ய முயன்று திமுக கடைசியாக மூக்குடைப்பட்டது ரோசய்யாவிடம்தான்
கருத்துகள்
கருத்துரையிடுக