பிரதமரை சந்தித்து தமிழகத்தின் நலன் குறித்தும் மற்றும் புயலுக்கு நிவாரண நிதி கோரினார் முதல்வர், அரசியல் சந்திப்பு இல்லை என திட்டவட்டம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களது படகுகளை திரும்பப் பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மாண்புமிகு பாரதப் பிரதமர் நரந்திரமோடி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

நிவர்,புரெவி புயல் பாதிப்புகள் மற்றும் அதீத மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதியுதவி அளிக்குமாறும், 
கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை கிலோவுக்கு ரூ.99.60 லிருந்து ரூ.150 உயர்த்தவும் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கவும், 

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், "நடந்தாய் வாழி காவிரி" திட்டம், சென்னை மெட்ரோரயில் திட்டம்-II உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கவும் மாண்புமிகு பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

அவர் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்:

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூறினார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோதும் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. நான் வந்தது, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காக தான். தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்தேன். அரசியல் எதுவும் பேசவில்லை, பேசுவதற்கு தகுந்த நேரமும் இல்லை. ஏனென்றால் தேர்தல் வருவதற்கு காலம் உள்ளது என திட்டவட்டமாக கூறினார்.

பாஜ எத்தனை தொகுதி கேட்கிறார்கள் என்பதெல்லாம் தேர்தல் அறிவிப்பிற்கு பிறகுதான் முடிவு செய்யப்படும். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுக பொதுக்குழுவில் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. சசிகலா வெளியில் வந்தால், அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே கிடையாது. அவர் அதிமுக கட்சியிலேயே கிடையாது. நாங்கள் சந்தித்தது தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றுதான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 100 சதவீதம் இதுதான் பேசினோம். அவரை (சசிகலா) அதிமுகவில் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய தொடர் கேள்விகளுக்கு சுடலையை போன்று உலராமால் பதில் கூறினார்.

மேலும் இலங்கை சிறையில் இருந்து இன்று 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மீனவர்களையும் விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளேன். தொடர் மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கும். 

பிரதமரிடம் வைத்த கோரிக்கை தொடர்பான கேள்விக்கு: கோதாவரி-காவிரி இணைப்பு  திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க  வேண்டும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் அதிகம் பயன்பெறும்  காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் மற்றும் காவிரி ஆற்றினை தூய்மைப்படுத்தும்  `நடந்தாய் வாழி காவிரி திட்டம்’ என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அரசு  நிதியுதவி அளிக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நிலை-IIக்கு  நிதியுதவி அளிக்க வேண்டும், கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையை கிலோ 93.60  ரூபாயில் இருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்’ என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?