இடைத்தேர்தல் தோல்வியின் போது கருணாநிதி எழுதிய கடிதம் ஒரு நினைவூட்டல்





கருணாநிதி எழுதிய கடிதம்:

அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும்,
அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட வைத்தார்கள்.
ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரசின் இலவச உதவிப் பொருள்களான
மிக்ஸிகள், கிரைண்டர்கள், மின் விசிறிகள் போன்றவை அந்தத் தொகுதிக்குள் கொண்டு சென்றதை 11/11/2013 தேதிய
"தினமலர்" நாளேடே வெளியிட்டிருந்தது.

ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்க ளின்
பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடவே
இல்லை.

தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக கொடி கட்டிய காரில்
வந்தபோது, அமைச்சருக்குப் பாதுகாப்பாக காவல் துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு
அரசு ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தினர்.

அதிமுக வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, நாற்பதுக்கும் மேற்பட்ட அதிமுக
கொடி கட்டிய கார்கள் தேர்தல் விதி முறைகளை மீறி வந்தன. 13/11/2013 அன்று பகல் 12 மணியளவில்
அனைத்து அமைச்சர்களும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களும் அயோத்தியாப்பட்டணத்தில்
அதிமுக கட்சி அலுவலகத் திறப்பு விழாவிற்கு நூறுக்கும் மேற்பட்ட அதிமுக கொடி கட்டிய வாகனங்களில் வந்ததோடு,
அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தின் பாதுகாப்பு வேலியை அகற்றி விட்டு, வாகன நிறுத்தத்திற்குப் பயன்படுத்தி உள்ளனர். அமைச்சர்களுடன்
சென்று வாக்குச் சேகரித்த அரசு அலுவலர், சத்துணவு அமைப்பாளர் ஒருவரின் புகைப்படமே ஏடுகளில் வெளிவந்தது.
விதிமுறைகளை மீறி சேலம் மாவட்டம் முழுவதும் முதலமைச்சர் படத்துடன் அம்மா உணவகம், இரட்டை
இலைச் சின்னம் பொறித்த அம்மா குடிநீர் விற்பனைக் கடை, தொகுப்பு வீடு களில் முதலமைச்சர் படம்
ஆகியவை அகற்றப் படாமல் இருந்தன.
தேர்தல் விதிகளை மீறி அமைச்சர் வீட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் என்ற அரசு அதிகாரி சென்று
ஆலோசனை நடத்தினார். அவருடன் மற்றொரு அதிகாரியும், 2 உதவியாளர்களும் தமிழக அரசு
வாகனத்தில் சென்றிருக்கிறார்கள்.
மின்னாம்பள்ளி கிராமத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களை மினி பேருந்து மூலமாக அமைச்சர்கள்
அழைத்து வந்து உப்புமா, பொங்கல் வழங்கியதோடு, அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து
ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் வீதம் வழங்கியிருக்கிறார்கள். இதை படம் எடுக்கச் சென்ற பறக்கும்
படையினரை, விரட்டயடித்திருக்கிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் உச்சக்கட்டமாக ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2000
ரூபாயும் வழங்கப்பட்டதாக ஏடுகளி லேயே வெளிப்படையாக செய்திகள் வந்தன. தொலைக்காட்சியிலே
அந்தக் காட்சிகள் காட்டப்பட்டன.

முதலமைச்சர் அந்தத் தொகுதியிலே பிரச்சாரம் செய்து ஏராளமான வாக்குறுதிகளையெல்லாம் வாரி
வழங்கினார். தேர்தல் விதிமுறைப்படி அவ்வாறு வாக்குறுதிகளை ஆட்சியில் இருப்போர் வழங்குவது தவறு
என்று கழகத்தின் சார்பில் புகார் தரப்பட்டு, அதனை விசாரித்த தலைமைத் தேர்தல் ஆணையம் முதல்
அமைச்சர் அளித்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்று எச்சரிக்கையை மாத்திரம் செய்ததே
தவிர, முதலமைச்சரே வாக்குறுதிகளை அளித்ததும், அவ்வாறு வாக்குறுதி அளிக்கவில்லை என்று தேர்தல்
ஆணையத்திற்கு உண்மைக்கு மாறான தகவலை விளக்கத்திலே எழுதிக் கொடுத்ததும் எவ்வளவு பெரிய
தவறு என்ற போதிலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இத்தனையையும் மீறித்தான் இந்தத் தேர்தலில் கழகம் போட்டியிட்டது. ஆனால் பணநாயகம், அராஜகம்,
அதிகாரம் ஆகியவற்றுக்கு முன்னால் கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பினை இழக்கக் கூடிய நிலை
ஏற்பட்டுவிட்டது. பெண்ணாகரத் தில் "டெபாசிட்" தொகையை இழந்து மூன்றாவது இடத்திற்குத்
தள்ளப்பட்ட அதிமுக தான் தற்போது தமிழகத்தின் ஆளுங்கட்சி! எனவே நான் நேற்று கூறியதைப் போல
இது வாக்காளர் களுக்கு ஏராளமாக பணம் வழங்கி, அதிமுக பெற்ற வெற்றியாகும்; இதுபோன்ற
தோல்விகளை எதிர்கால வெற்றிக்கு ஏணிப்படிகளாக ஆக்கிக் கொண்டு, தோல்வியைக் கண்டு
துவளாமல், தொடர்ந்து பணியாற்றிடுவோம்!


தற்போது தமிழகத்தில் ஈரோட்டில் வெற்றி பெற்றதை ஏதோ ஸ்டாலினின் செல்வாக்கில் வென்றதை போல காட்டிக்கொள்ளும் திமுகவுக்கு இந்த கடிதம் ஒரு நினைவூட்டல்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?