என்ன செய்தார் அம்மா அவருக்கு போய் 80 கோடி செலவில் நினைவிடம் அமைக்க????
என்ன செய்தார் அம்மா அவருக்கு போய் 80 கோடி செலவில் நினைவிடம் அமைக்க????
ஒன்றா இரண்டா...
2035 இல் பெற வேண்டிய பெண்கள் முன்னேற்றத்தை 2021இல் அம்மாவின் அரசு எப்படி சாத்தியப் படுத்தியது என்று சொல்லும் அளவுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு எண்ணில் அடங்கா திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தியுள்ளது...
1. பெண்களின் வேலை பளுவை குறைக்க மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்து அவர்களை பழக்கப் படுத்திய அரசு அம்மாவின் அரசு,
2. உள்ளாட்சி அமைப்பில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு,
3. அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்கிய அரசு அம்மாவின் அரசு,
4. வேலைக்கு போகும் பெண்களுக்கு 50% மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கும் அரசு அம்மாவின் அரசு,
5. படித்த பட்டதாரி மாணவிகளுக்கு தாலிக்கு தங்கம், 50 ஆயிரம் வரை கல்யாண பணம் வழங்கும் அரசு அம்மாவின் அரசு,
6. வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து தாய் மார்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பெயரிலும் தலா 1 லட்சம் நீண்ட கால வைப்பு நிதி ஒதுக்கீடு செய்து, அவர்களின் மேல் படிப்புக்கு கிடைக்கும் வண்ணம் செயலாற்றும் அரசு அம்மாவின் அரசு,
7. பெண்கள் பாதுகாப்பாக இருக்க SOS காவலன் செயலி அறிமுகம் செய்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு அம்மாவின் அரசு,
8. இந்தியாவிலேயே அதிக பெண் காவல் நிலையம் உருவாக்கிய அரசு அம்மாவின் அரசு,
9. பெண் சிசக்கொலை மிகவும் குறைவான அளவில் இருக்கும் வகையில் செயலாற்றும் அரசு அம்மாவின் அரசு,
10. அனைத்து அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் பேரு கால நிதி மற்றும் குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் இலவசமாக வழங்கும் அரசு அம்மாவின் அரசு,
63 % இடஒதுக்கீடு கொண்டு வந்து சமூக நீதி காத்த அரசு அம்மாவின் அரசு,
அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழக்கும் அரசு அம்மாவின் அரசு,
அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் அரசு அம்மாவின் அரசு,
அனைத்து ரேசன் கார்டு மூலமாக இலவச அரசி வழங்கும் அரசு அம்மாவின் அரசு,
அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை வழக்கும் அரசு அம்மாவின் அரசு,
அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் தோறும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கும் அரசு அம்மாவின் அரசு,
அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா கல்யாண மண்டபம் என்று மலிவு விலையில் ஏழைகளுக்கு உதவி கிடைக்கும் வண்ணம் செயலாற்றும் அரசு அம்மாவின் அரசு,
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அம்மாவின் சிறப்பை. இவருக்கு இன்னும் ஆயிரம் கோடியில் நினைவிடம் கட்டினாலும் அது அவருக்கு நாம் செய்யும் நன்றி கடன் மட்டுமே ஒழிய வேறேதும் இல்லை....
கருத்துகள்
கருத்துரையிடுக