அம்மா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லம் ஆனது

அம்மா புரட்சி தலைவி மாண்புமிகு மக்களின் தாய் குலதெய்வம் செல்வி  ஜெ ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் நினைவு இல்லம் ஆனது

குத்துவிளக்கு ஏற்றி முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஜனவரி 28 2021 காலை 10:30 மணிக்கு திறந்து வைத்தனர்.
நினைவு இல்ல கல்வெட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நீதிமன்ற வழக்கு முடிந்தவுடன் வேதா நிலையம் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.
வேதா நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்:

வேதா நிலையம் 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள வீடு ஆகும். அங்கு நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும்.
இங்கு 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன. சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான பிளாக் அன்டு ஒயிட் அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?