டாக்டர் வி.சாந்தா மறைவுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல்
சென்னை-அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சிறந்த சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் வென்றுள்ள இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னலமின்றி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் மாண்புமிகு அம்மா அவர்கள் உட்பட அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர்.
அவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். 65 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஓய்வற்ற சமூக சேவையால் அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற டாக்டர் வி.சாந்தா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
- துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.
கருத்துகள்
கருத்துரையிடுக