திருமதி சசிகலா அவர்கள் தன் தோழிக்கு கைமாறு செய்வாரா????

இதுவரை நான்(என்றும் அதிமுக தொண்டனாக) சசிகலா தான் நம் அம்மாவை கொன்றார் என்று எங்கும் பதிவு செய்தது இல்லை...

மேலும், இதை குருமூர்த்தி தான் ஓபிஎஸ் வாயிலாக சொன்னார். இதனால் இங்கு நான் ஓ பி எஸ் அவர்களை தவறாக பதிவிடுவதாக கருத வேண்டாம், தான் உயிருக்கு உயிராக நினைத்த தன் அம்மாவின் மரணம் இப்படி சிலர் கூறுவதை கேட்டு உண்மை தானோ என்று நடப்பது என்பது மனிதனுக்கு இயல்பே. சிலர் வந்து இதற்கு என்னை திட்டலாம் ஆனால் உண்மை இதுவே. எப்பாடியாரும் இதை சொன்னது இல்லை.
அம்மா உடல்நலம் பாதித்து தான் இறந்தார். ஆனால் அவரை TTV போன்றார் தவறாக வழி நடத்தி, ஜெயலலிதா போன்று வேடமிட்டு முதல்வர் ஆசை காட்டி, தன் நன்மதிப்பை தானே கெடுத்து கொண்டார்கள். இதனால் தான் முன்பே TTV யை அம்மா கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்தார். 

சசிகலா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் வந்து அரசியலை விட்டு விலகி இருந்து அதிமுக ஆட்சி மீண்டும் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதுவே அவர் தன் தோழிக்கு செய்யும் கைமாறு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?