திமுக ஒன்றை ஆதரிக்கிறது என்றால் அது கட்டாயம் தேசத்திற்கு எதிரானதாக தான் இருக்கும்...
திமுக ஒன்றை ஆதரிக்கிறது என்றால் அது கட்டாயம் தேசத்திற்கு எதிரானதாக தான் இருக்கும்...
உதாரணம் இல்லாமல் இருந்தால் எப்படி????
இதோ...
கச்சத்தீவை நல்லெண்ண அடிப்படையில் இலங்கையிடம் கொடுத்த இந்திரா காந்தி, அப்போது ஆட்சியில் இருந்தது யார் என்று பார்த்தால் வேறு யார் நம்ம கருணாநிதி தான். யாருக்கு நல்லது என்று தற்போது உங்களுக்கு தெரியாமல் இருக்காது...
சமூக நீதியை சீர்குலைத்த நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் அதன் அமைச்சரவையில் பங்குபெற்ற திமுகவும் தான் ஆனால் இன்று அதிமுக மீதே தன் சார்பு ஊடகங்களை வைத்து பழி போடும் ஸ்டாலின், பொய்யை மட்டுமே பேசும் திமுக என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று மார்தட்டிக் கொள்ளும் நாம். மாடுகளை காட்சிப் படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்து, அது காட்டுமிராண்டி தனம் என்று சொல்லியது காங்கிரஸ் - திமுக ஆட்சியில் தான் என்பதும். அதன் ஆட்சி காலத்தில் தான் ஜட்டிகட்டு தடை செய்யப்பட்டது. ஆனால் இப்போது இதை பார்க்க வந்த ராகுல் காந்தி சொன்னது தான் கொடுமை, இதை மாடுகளை கொடுமை படுத்தும் நிகழ்வு இல்லை என பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்னார். அப்ப நீங்க இதை பற்றி, எங்கள் வீரம் பற்றி தெரியாமலே தடை செய்தீர் அப்படி தானே???
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுத்து விட்டு ஆட்சி முடிந்து அதையே எதிர்த்து போராட்டம் நடத்திய பின்பு, குட்டு வெளிப்பட்ட பிறகு அந்த திட்டத்தை பற்றி தெரியாமல் கையெழுத்து போட்டதாக கூறினார். ஒரு திட்டத்தை பற்றி தெரியாமல் ஒருவன் கையெழுத்து போட்டான் என்றால் அவன் மக்கள் மீது கொண்ட பற்று என்ன என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தை கொண்டு வந்த போது ஸ்டாலின் தான் தமிழகத்தின் துணை முதல்வர்!!!!
இப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக 3 வேளாண் சட்டங்களை இயற்றிய பின்பு அதை எதிர்த்தது திமுக தான். ஆம்!!! திமுக 2016 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார்கள், அதுவும் குறிப்பாக இவர்கள் எதை சொல்லி எதிர்க்கிறார்களோ அதை தான் கொண்டு வருவதாக சொல்லியிருந்தார்கள் என்பது கூடுதல் தகவல். இவர்கள் பிழைப்பு இப்படி தான். அதை எதிர்த்து ஒரு கூட்டம் போராடுகிறதாம் அதுவும் 2 மாதம், நம்புங்கள் விவசாயி தன் வேலையை விட்டுபுட்டு 2 மாசம் அதுவும் வேறு மாநிலம் சென்றுமாம். இந்த போராட்டத்தை ஆதரிப்பது வேறு யார் தெரியுமா??? வேறு யார் நம்ம திமுக தான்... 3.5 லட்சம் டிராக்டர்கள் வைத்து பேரணியாம் அதுவும் குடியரசு தினத்தில் அதுவும் டெல்லியிலாம்... அந்த பேரணியிலும் கலவரம்,,, செங்கோட்டை சென்று கொடி ஏற்றினார், தேசிய கொடி கிடையாது காலிஸ்தான் கொடி... அது என்ன காலிஸ்தான் என்று கேட்கிறீர்களா??? பஞ்சாப் தனி நாடு கோரிக்கை வைக்கும் இயக்கத்தினர். இப்போது புரிகிறதா திமுக ஆதரவு கொடுப்பது யாருக்கு என்று????
கருத்துகள்
கருத்துரையிடுக